வணக்கம்.
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், சென்ற கல்வியாண்டில் இருந்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சி.சி.இ. மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிணி மதிப்பீட்டு முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 'சுட்டி விகடன்’ இதற்கு ஆற்றிவரும் பொறுப்புமிக்க பங்களிப்பையும் நீங்கள் அறிவீர்கள்.
'புத்தகங்கள் படிப்பது சலிப்பூட்டுவது’ என்ற நிலையை மாற்றி, கற்றல் என்பதை இனிமையானதாக மாற்றும் இந்த மதிப்பீட்டு முறையில், மாணவர்களின் கற்பனை வளமும் எழுத்துத்திறனும் அபரிமிதமாக வளர்கிறது. இதற்காக வழங்கப்படும் திகி என்ற வளரறி மதிப்பீட்டில், மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற, ஆசிரியர்களாகிய நீங்கள் எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்பதை 'சுட்டி விகடன்’ நன்கு அறியும். ஆகவேதான், தமிழகக் குழந்தைகளின் உளவியலை, கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்துவருபவர்கள் என்ற அடிப்படையில், சுட்டி விகடன் திகி பக்கங்களை’ வழங்கிவருகிறது. 'சுட்டி க்ரியேஷன்ஸ்’ தொடங்கி 'வாங்க... வரைந்து பழகலாம்’ வரை பல பகுதிகள் திகி-வுக்கு மிக மிக உதவக்கூடியவை. ஆசிரியர்களின் பங்களிப்புடன் மொத்தம் 16 பக்கங்களில், 9-ம் வகுப்பு வரை பாடவாரியாக செயல்பாடுகளும் செயல்திட்டங்களும் தரப்படுகின்றன. அவ்வப்போது ஸ்கிராப் புக், படங்களின் ஆல்பம் முதலானவையும் சுட்டி விகடன் இதழுடன் இணைப்புகளாக வழங்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுட்டி விகடனின் இந்தப் பக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிற. இது இன்னும் அதிகமானவர்களைச் சென்றடைய உங்களைப் போன்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் அவசியமாகிறது. மாணவர்களின் சிசிணி மதிப்பீட்டு முறையைக் கருத்தில்கொண்டு, தற்போது சுட்டி விகடனில் வெளியாகும் பக்கங்களில், என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதை, ஆசிரியர்களாகிய நீங்கள் சுட்டிக்காட்டினால், அது மாணவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமையும். உங்கள் மாணவர்களுக்கு சுட்டி விகடனை அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு புதிய உலகத்தின் ஜன்னலை திறந்துவிட முடியும்.
மாணவர்களின் அசத்தலான அறிவுத்திறனை வெளிக்கொண்டுவரும் சவால் நிறைந்த இந்தப் பணியில், நாம் உற்சாகத்துடன் இணைந்து செயல்படுவோம்.
நன்றி!
- ஆசிரியர்