Published:Updated:

நாங்களும் அசத்துகிறோம்!

நாங்களும் அசத்துகிறோம்!

நாங்களும் அசத்துகிறோம்!

நாங்களும் அசத்துகிறோம்!

Published:Updated:
##~##

சுட்டி விகடனில் வெளிவரும் FA பக்கங்கள் தங்களுக்கு எந்த வகையில் உறுதுணைபுரிகிறது என இலத்தூர் - லெட்சுமி அரிகர உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை சுஜா கண்ணம்மாள் கூறும்போது, ''பள்ளிப் பாடங்கள் கசப்பு எனும் தோற்றத்தை மாற்றியதில் CCE முறைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. வழக்கமான கற்பித்தல் முறையிலேயே பாடங்களை நடத்திய ஆசிரியர்களுக்கு, செயல்வழியில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு ஆரம்பத்தில் சிரமம் இருந்தது. ஒரு பக்கம் கல்வித் துறை தொடர்ச்சியாக அளித்து வந்த பயிற்சிகளும், மறுபுறம் சுட்டி விகடனின் வழிகாட்டுதல்களும் ஆசிரியர்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

நாங்களும் அசத்துகிறோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களுக்கு தேர்வுகளைத் தைரியமாகச் சந்திக்கவைத்ததில், சுட்டி விகடனின் FA பக்கங்களுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. கடினமான பாடத்தையும் எளிமையாக்கி, மாதம் இருமுறை வந்து மதிப்பெண்களை வழங்கியது சுட்டி நண்பன். CCE முறையின் நோக்கமே மாணவர்களின் கற்றல் சூழலை இனிமையாக்குவதுதான். அதை மேலும் இனிமையாக்கியது சுட்டி விகடன். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, அதேவேளையில் பாடங்களுடன் தொடர்புடைய பல்வேறு சுவையான செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் வழங்குவது, ஆசிரியர்களுக்கும் உதவியாக இருக்கிறது'' என்கிறார்.

நாங்களும் அசத்துகிறோம்!

தங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் விதவிதமான செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கிவருவது குறித்து, தர்மபுரி மாவட்டம் - சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.பழனி, ''எங்கள் பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 160 மாணவர்கள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் FA   செயல்பாடுகளை வழங்குவது தொடர்பாக ஆசிரியர்களிடம் சில குழப்பங்கள் நிலவின. அந்த நேரத்தில்தான் சுட்டி விகடனின் FA  பக்கங்கள் பற்றி அறிந்தோம். எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தொடர்ந்து சுட்டி விகடன் இதழ்களை வாங்கி, அதில் உள்ள செயல்பாடுகளை வகுப்பில் நடைமுறைப்படுத்தி அசத்தத் தொடங்கினர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல பலன் கிடைத்தது. ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த செயல்பாடுகளுடன், இதுவரை அறிந்திராத செயல்பாடுகளையும் தெரிந்துகொண்டு, அவற்றை வகுப்பில் மாணவர்களிடம் கொண்டுசெல்வதற்கும் இது வழிவகுக்கிறது. CCE முறையைப்பற்றி முழுமையான புரிதலுக்கு உதவிடும் சுட்டி விகடனில், FA  பக்கங்கள் தவிர்த்து மற்ற பல பகுதிகளும் கல்வி சார்ந்ததாகவும், மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்திடும் வகையில் உள்ளது'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism