Published:Updated:

எங்கள் சுமைகள் குறைந்தன !

எங்கள் சுமைகள் குறைந்தன !

எங்கள் சுமைகள் குறைந்தன !

எங்கள் சுமைகள் குறைந்தன !

Published:Updated:
##~##

பாடங்களை மனப்பாடம் செய்வது, எழுதிப்பார்ப்பது, தேர்வு நேரங்களில் கண்விழித்துப் படிப்பது முதலான நிலைகளில் இருந்து, ஜாலியாக புராஜெக்ட்களைச் செய்து அசத்துவது, தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்துவது எனத் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மாறி இருப்பதை வெகுவாக ரசிக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த இனிமையான சூழலுக்கு வகைசெய்த CCE மதிப்பீட்டு முறையை வரவேற்கும் பெற்றோர்கள், FA பக்கங்கள் மூலம் மாணவர்களுக்குத் துணைபுரியும் சுட்டி விகடனின் முயற்சியையும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

''என் மகள் லலிதா ஸ்ரீ, திருப்புவனத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். அவள் எட்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் மதிப்பெண்கள் போடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. 'எனக்கு புராஜெக்ட் பண்ணணும்... என்ன பண்ணணும் தெரியலை’னு விழிப்பாள். பிரௌஸிங் சென்டருக்குப் போய் தகவல்கள் திரட்டுவதற்கு பணம் செலவாகும். அப்போதுதான் சுட்டி விகடன் மூலம் எங்களுக்கு ஆச்சரியம் கிடைத்தது. பள்ளியில் லலிதாவுக்குக் கொடுக்கப்படும் செயல்திட்டங்களைச் சிறப்பாக செய்வதற்கான அத்தனை வழிகாட்டுதல்களும் சுட்டி விகடன் மூலம் கிடைத்தன. குறிப்பாக, ஒவ்வொரு பருவத்துக்கும் வழங்கப்படும் ஸ்கிராப் புக் மிகவும் உதவியாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கள் சுமைகள் குறைந்தன !

ஆல்பம் தயாரிப்பதற்கான படங்களைத் திரட்டுவதும் சிரமமே இல்லை. இதனால், எங்களுக்கு எந்தக் கூடுதல் செலவும் இல்லை. அதிலும், ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் FA புராஜெக்ட் போட்டிகள் வைப்பதால், மாணவர்களுக்கு மேலும் தன்னம்பிக்கை ஊட்டப்படுகிறது. என் மகளின் புராஜெக்ட், சுட்டி விகடனில் வெளிவந்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்றார் வள்ளி மயில்.

எங்கள் சுமைகள் குறைந்தன !

திருப்பூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ''என் மகள் ஜனனி, மெட்ரிக் பள்ளியில் படிக்கிறாள். CCE முறை நடைமுறைக்கு வந்த பிறகு, வழக்கத்தைவிட அதிகமாகவே புராஜெக்ட்டுகள் தரப்படுகின்றன. அதை எளிதாகச் செய்து முடிப்பதற்கு சுட்டி விகடன் உதவுகிறது. FA பக்கங்கள் மட்டுமின்றி, மற்ற பகுதிகளும் படிப்புக்கு உதவுவதாக இருக்கின்றன. பாடத்துக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது உள்ளிட்ட விஷயங்களில், எங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism