Published:Updated:

ஹலோ குர்சுரா !

ராம்ஜீஸஸ்

ஹலோ குர்சுரா !

ராம்ஜீஸஸ்

Published:Updated:
##~##

நம் நாட்டின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். குர்சுரா (INS KURSURA),, இந்திய கப்பற்படையில் 1969 முதல் 2001 வரை சிறப்பாகப் பணியாற்றியது. இப்போது குர்சுரா, ஆசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங் காட்சியகமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினக் கடற்கரையில் கம்பீரமாக நங்கூரமிட்டுள்ளது.

இதில் அமைக்கப்பட்டிருக்கும் சோனார் சிக்னல்தான் இந்தக் கப்பலின் கண்களாகச் செயல்பட்டன. எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக் கவும், கடலுக்கு அடியில் கப்பலைச் செலுத்தவும் இது உதவியாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிரிக் கப்பல்களை தாக்கி அழிக்க இதனுள் 22 வெடிகண்ணிகள் (Torpedoes) ,  இருந்தன. வெடிகண்ணிகளை செலுத்த உயர் அழுத்தக் காற்று பயன்படுத்தப்பட்டது. அடுத்து, பேலஸ்ட் டேங்க் (Ballast Tank). இது நீர்மூழ்கி தண்ணீரில் மூழ்குவதற்கும் மிதப்பதற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கப்பல் தண்ணீரில் மூழ்கியிருக்கும்போது இன்ஜினை இயக்குவதற்கு காற்று இல்லாதுபோனால், பேட்டரியில் இயக்குவதற்கு 488 பெரிய வகை பேட்டரிகள் இருந்தன. பேட்டரிகள் தன் சக்தியை இழந்தால், உடனே கப்பல் தண்ணீரின் மேல் மட்டத்துக்கு சற்று கீழே வந்து, தன் சுவாசிக்கும் மேல் பகுதியை மட்டும் தண்ணீரின் மேல் நீட்டி, காற்றை இழுத்துக்கொள்ளும். பின் டீசல் இன்ஜினை இயக்கி, பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளும்.

ஹலோ குர்சுரா !

72 வீரர்கள் இதில் பணியாற்றினர். இவர்கள் தங்குவதற்கு, உணவு அறை, சமையல் அறை என அனைத்தும் இதில் இருந்தது. இந்தக் கப்பல் மிதக்கும்போது 1,945 டன்னும் கடலின் அடியில் இருக்கும்போது 2,469 டன் எடையும்கொண்டது. 91.3 மீட்டர் நீளமும் 11.92 மீட்டர் உயரமும் உடையது.

விசாகப்பட்டினத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது குர்சுரா.

ஹலோ குர்சுரா !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism