Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

Published:Updated:

நகரும் இமயமலை!

##~##

'மலை மாதிரி கொஞ்சமும் அசைய மாட்டேங்கறானே’ என்று சொல்வதுண்டு. ஆனால், நம் கண்களுக்குத் தெரியாத வகையில் மலைகளும் அசைந்து, நகர்ந்துகொண்டுதான் இருகின்றன. உலகின் பெரிய மலைகளில் ஒன்றான இமயமலைச் சரிவின் கிழக்குப் பகுதி, கடந்த 30 லட்சம் ஆண்டுகளாக ஆண்டு ஒன்றுக்கு இரண்டு சென்டிமீட்டர் வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறதாம். மேலும், இமயமலையின் பரந்த நிலப்பரப்பு, ஆண்டு ஒன்றுக்கு நான்கு சென்டிமீட்டர் உயர்ந்து, மேடாகி வருவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

 நான் காந்தி!

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுக்க, பென் கிங்ஸ்லி என்ற நடிகர் தேர்வு செய்யப்பட்டார். அவர் தங்குவதற்காக புதுடெல்லியில் ஆடம்பரமான விடுதி ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து வசதிகளும் அங்கே இருந்தன. அவர் மகிழ்ச்சி அடைவார் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர். அங்கேவந்த பென் கிங்ஸ்லியோ, ''காந்தி மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். அவரைப் போல நடிக்கும் வரையிலாவது நான் எளிமையாக இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டும் போதும்'' என்று சொல்லி வியக்கவைத்தார்.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

 கின்னஸ் பிறந்தது!

ஒருமுறை அயர்லாந்தில் துப்பாக்கி சுடும் ஜாலியான போட்டி நடந்தது. அதில் சர் ஹக் பிவர் (ஷிவீக்ஷீ பிuரீலீ ஙிமீணீஸ்மீக்ஷீ) என்பவர் கலந்துகொண்டார். அப்போது, துப்பாக்கி சுடுதலில் ஐரோப்பிய சாதனையாளர் யார் என்ற விவாதம் வந்தது. பல்வேறு புத்தகங்களைப் புரட்டியும் பதில் கிடைக்கவில்லை. 'சிறந்த சாதனையாளர்கள் பற்றி சரியான பதிவுகூட இல்லையே’ என்று நினைத்தார் ஹக் பிவர், இதற்காக தானே ஒரு புத்தகத்தை வெளியிட முடிவு செய்தார். 1955 ஆகஸ்ட் 27-ல் கின்னஸ் புத்தகம் பிறந்தது.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !

 எட்டாவது அதிசயம்!

ஏழு அதியசங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். எட்டாவது அதிசயம் தெரியுமா? துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருக்கும் 'ஹாகியா சோபியா’ (பிணீரீவீணீ ஷிஷீஜீலீவீணீ) என்ற கட்டடம்தான் அது. உலகின் சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு. அழகிய உள் அலங்காரம் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளும், மொசைக் ஓவியங்களும் பிரமிக்கவைக்கும். அதைவிட, பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கட்டடம் பெற்ற அடையாளங்கள் கவனிக்க வேண்டியவை. கி.பி.537-ல் இது கட்டப்பட்டபோது, தேவாலயமாக இருந்தது. 1453-ல் மசூதியாக மாறியது. 1935-ல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism