Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
##~##

பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி மையம், மிக விரைவில் உலகின் பார்வைக்கு வரப்போகிறது. இங்கே அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி. பல்கலைக்கழகங்கள், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுடன் இணைந்து பிரமாண்டமான தொலைநோக்கியை அமைத்துள்ளன.

1,300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டறியும் திறன்மிக்க 'முர்ச்சின் ஒய்டுஃபீல்டு அரே’ என்ற இந்த நவீனத் தொலைநோக்கியின் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. ''இந்தத் தொலைநோக்கியைக்கொண்டு குறுங்கோள்களின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம், அது திடீரென வெடித்துச் சிதறுவதன் காரணங்கள்குறித்தும், சூரியன், பிற கோள்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் தெளிவாக அறியலாம்'' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

 மக்காச்சோளத்தின் உதவியால் இயந்திரத்தை இயங்கவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளார், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் நந்தினீஸ்வரி.

''மெத்தனாலையும் சோடியம் ஹைட்ராக்ஸைடையும் சேர்த்தால், கிடைப்பது சோடியம் மீதாக்ஸைடு. அதை மக்காச்சோள எண்ணெயுடன் கலந்தால், இயற்கைக்குப் பாதகம் இல்லாத பயோடீசலும், மருத்துவத்துக்குப் பெரிதும் பயன்படும் கிளிசரினும் கிடைக்கும். இந்த பயோடீசலைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையைக் குறைக்கலாம்'' என்கிறார்.

பென் டிரைவ் !

அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான 'இன்ஸ்பைர்’ விருதை வென்றுள்ள நந்தினீஸ்வரி, ''போலீஸ் ஆகணும்னு எனக்கு ஆசை. ஆனாலும், யாராவது உதவி செய்தால், இதுபோல இன்னும் நிறைய இயற்கைக்கு சாதகமான விஷயங்களையும் கண்டுபிடிப்பேன்'என்கிறார்.

- லோ.இந்து
படம்: இ.பொன்குன்றம்

பென் டிரைவ் !

ஒலிங்குயிடோ (Olinguito) சமீபத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விலங்கின் பெயர். பார்ப்பதற்கு வீட்டுப் பூனையும் டெட்டி பியர் பொம்மையும் கலந்திருப்பதுபோல் இருக்கும். இதனை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூட் (Smithsonion Institute) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெரிய கண்கள்கொண்ட இந்த விலங்கின் எடை இரண்டு பவுண்டுகள். ''கொலம்பியா மற்றும் ஈக்வடார் காடுகளில் காணப்படும் இந்த விலங்கு, பெரும்பாலும் இரவில்தான் உணவு தேடும். பழங்களை விரும்பி உண்ணும். மரங்களின் மேலேயே இருக்கும். கீழே வருவது மிகவும் அரிது'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

 விமானத்தின் ஓடுபாதை (Runway) குறுக்கே நெடுக்கே எந்த ஓர் இடையூறும் இல்லாமல், சமச்சீராகதானே இருக்கும்? ஆனால், ஓடுபாதை குறுக்கே ரயில்பாதை செல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பென் டிரைவ் !

நியூஸிலாந்து நாட்டின் தெற்கு ஐஸ்லாந்தின் கிழக்குக் கடற்கரையின் அருகில் கிஸ்போர்னே(Gisborne) என்ற சிறிய விமான நிலையம் உள்ளது. இங்கே ஓடுபாதையின் நடுவில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கும். இந்த ரயில் பாதையில் காலை 6.30 முதல் இரவு 8.30 வரை ரயில்கள் இயங்குகின்றன. விமானம் அல்லது ரயில் எது முன்னதாக வருகிறதோ அதைப் பொறுத்து மற்றதை நிறுத்திவைப்பார்கள். இந்த விமானநிலையத்துக்கு தினமும் 60 உள்ளூர் விமானங்கள் வந்து செல்கின்றன.

பென் டிரைவ் !

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன். இட்லி தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்யும் இவர், சமீபத்தில் கின்னஸ் சாதனை புரிவதற்காக பிரமாண்டமான இட்லியைத் தயாரித்திருக்கிறார். இந்த இட்லியின் எடை 120 கிலோ 300 கிராம். மேலும், இந்த நிகழ்ச்சியில் சத்து மாவு, கீரை, கேழ்வரகு, பூசணி, பாதாம் என 100 சுவைகளில் விதவிதமான இட்லிகளைக் கண்காட்சியாக வைத்து பார்வையாளர்களை பிரமிக்கவைத்தார் இனியவன்.

பென் டிரைவ் !

உலகின் மிகப் பெரிய புத்தகத்தை, உலகின் மிக குள்ளமான பெண் வெளியிட்ட வித்தியாசமான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. ராஜஸ்தானின் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரண்டு அடி உயரம்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஜோதி. இவர் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்பூரில் 30 அடி உயரமும் 24 அடி அகலமும்கொண்ட மிகப் பெரிய புத்தகத்தை வெளியிட்டார். ஜெயின் முனி எழுதிய இந்தப் புத்தகத்தின் பெயர் 'காட்வி பிரவச்சன்’ (Kadve Pravachan). இரண்டு டன் எடைகொண்ட இந்தப் புத்தகத்தை, 10 பேர் சேர்ந்து நான்கு நாட்களில் தயாரித்திருக்கிறார்கள்.