மூச்சுத் திணறல் பிரச்னையைச் சரி¢செய்வதற்காக தண்ணீருக்குள் குதித்த விஷாலுக்கு, இன்று அந்தத் தண்ணீரே சாதனை உலகமாகிவிட்டது.

தஞ்சாவூர், யாகப்பா மெட்ரி¢குலேஷன் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஷால் சபரி¢, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் தேசிய அளவில் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும், மாநில அளவுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களைத் தக்க வைத்திருக்கும் திறமைசாலி.

தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இதன் மூலம் மூன்று வெள்ளிப் பதக்கங்களைத் தமிழகத்தின் சார்பில் கைப்பற்றி இருக்கிறார் விஷால்.

'எனக்கு மூச்சுத் திணறல் இருக்கு. என் பையனுக்கும் அதே பிரச்னை. நீச்சல் பயிற்சி நல்லதுன்னு டாக்டர் சொன்னார். அதுக்காக நீச்சல் வகுப்புக்கு அனுப்பினோம். அவனோட வேகத்தையும் ஆர்வத்தையும் பார்த்துதான் போட்டிகளுக்கு அனுப்பினோம். 6 வயதில் ஆரம்பிச்சது. இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வாங்கியிருக்கான்'' என்று நெகிழ்கிறார் விஷாலின் அம்மா மீரா.

''இப்போதைக்கு, இந்திய அளவில் பெரி¢ய நீச்சல் வீரராக வரணும். அதுதான் என் லட்சியம். ஸ்கூல்லயும் நிறைய ஹெல்ப் பண்றாங்க. பார்த்துட்டே இருங்க, நிச்சயமா தேசிய அளவில் இன்னும் பல பதக்கங்களை வாங்குவேன்'' என்கிறார் விஷால் சபரி.

''அப்போ ஒலிம்பிக்?'' என்று கேட்டால்...

''முதல்ல இதை முடிப்போம். இன்டர்நேஷனல், ஒலிம்பிக்கை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்'' என்று சிரிக்கிறார் விஷால்!