Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

ஹாசிப்கான்

##~##

''ஹலோ ஜீபா... எதைப் பற்றியாவது சொல்லும்போது, 'புல், பூண்டுகூட முளைக்காது’ என்கிறார்களே அது ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   - வே.சரண்யா, அவிநாசி.

''விலங்கினங்களில் ஒரு செல் உயிரி (அமீபா) எனத் தொடங்கி, பாலூட்டி வரை பல கட்டங்கள் இருப்பது உனக்குத் தெரியும். அதுபோல நிலத்தில் வளரும் தாவரங்களைப் புல், பூண்டு, செடி, மரம் எனப் பல கட்டங்களாகப் பிரிக்கிறார்கள். இதில், புல்லும் பூண்டும் முதல் கட்டத் தாவரங்கள். இவை எந்த இடத்திலும் சுலபமாக வளரும். இரண்டு வருடங்கள் வரை மட்டுமே இவற்றின் ஆயுள். இதுகூட முளைக்காத  மண்ணில் எந்தவித சத்தும் இருக்காது. அல்லது அந்த மண் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கும். இதைக் குறிப்பிடத்தான் புல், பூண்டுகூட முளைக்காது என்கிறார்கள்.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... மனிதர்களை, குழந்தை, சிறுவன், இளைஞன் என்று சொல்வது போல விலங்குகளை வயதின் அடிப்படையில் சொல்வதில்லையே ஏன்?''

  - பி.சரண்யா, திருவண்ணாமலை.

''இவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தது மனிதன் என்பதால், விலங்குகளைக் 'குட்டி’, 'கன்று’ என்றும் பறவைகளைக் 'குஞ்சு’ என்றும் சொல்வதுடன் நிறுத்திக்கொண்டான். ஆனால், மனிதர்களுக்கு நெருக்கமான சில விலங்குகளை வயதின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். குறிப்பாக, குதிரைக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. ஒரு வயதுக்கும் குறைவான குதிரைகளை 'ஃபோல்’ (Foal) என்பார்கள். ஒன்று முதல் இரண்டு வயதுக் குதிரைகளுக்கு, 'இயர்லிங்’ (Yearling) என்று பெயர். நான்கு வயது ஆண் குதிரைகளை 'கோல்ட்’ (Colt) என்றும் பெண் குதிரைகளை 'ஃபில்லி’ (Filly) என்றும் அழைப்பார்கள்.''

''டியர் ஜீபா...‘Mayfly’ என்று ஒரு பூச்சி இருக்கிறதாமே..?

  - அ.பாலமுருகன், சென்னை-77.

''ஈசல் பூச்சியே ஆங்கிலத்தில் 'மேஃப்ளை’ எனப்படுகிறது. உலகம் முழுவதும் 2,500 வகையான ஈசல்கள் உள்ளன. இவற்றில் 630 வகை ஈசல்கள், வடஅமெரிக்காவில் உள்ளன. அங்கே, மே மாதத்தில்தான் ஈசல்கள் அதிகமாகக் காணப்படுவதால், அந்தப் பெயர். பொதுவாக, பிற நாடுகளில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கூட்டம் கூட்டமாக ஈசல்கள் வெளிப்படும்.''

''மனிதர்களின் கை, கால்களில் முடி முளைப்பது ஏன்? அதை எப்படித் தவிர்ப்பது?''

   - ஏ.தினேஷ், கோயம்புத்தூர்.

மை டியர் ஜீபா !

''ஏன் தவிர்க்க வேண்டும் தினேஷ்? இயற்கை, காரணம் இல்லாமல் எதையும் உருவாக்குவதில்லை. நமது கை, கால்களில் முடி முளைப்பதிலும் பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக, குருத்தணுக்கள் எனப்படும் ஸ்டெம் செல்கள் (Stem Cells) நமது உடலில் இருக்கின்றன. நமக்குக் காயம் ஏற்பட்டால், அது ஆறுவதற்கு இந்த செல்களே காரணம். இவற்றை அழியாமல் பராமரிப்பது நமது தோலுக்கு அடியில் இருக்கும் மயிர்க்கால்களே. எனவே, உடலில் இருக்கும் முடிகளை, அழகைக் கெடுக்கும் விஷயமாக நினைக்கக் கூடாது.''

''ஹாய் ஜீபா... வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற நடைமுறை எப்படி உருவானது?''

  - என்.பிரேமிகா, சேலம்.

மை டியர் ஜீபா !

''தொடக்கத்தில், மாதத்தின் அடிப்படையில்தான் நாட்கள் கணக்கிடப்பட்டன. வணிகம் செய்ய ஆரம்பித்ததும், குறிப்பிட்ட நாளில் ஓர் இடத்தில் எல்லோரும் ஒன்றுசேர நினைத்தார்கள். ஏழு முறை சூரியன் மறைந்து உதித்ததும் ஒன்றுசேர்வது என்று முடிவுசெய்தார்கள். பாபிலோனியர்கள்தான் இதை முதலில் தொடங்கியவர்கள். பிறகு, எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் அந்த ஏழு நாட்களுக்கும் பெயர்களை வைத்தார்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism