பிரீமியம் ஸ்டோரி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜுன்ரே பலவிங் உலகின் மிகச் சிறிய மனிதர் எனக் கண்டறியப்பட்டிருக்கிறார்.

நேபாளத்தின் கஹேந்த்ரா தபா மகர் என்பவர்தான் இதுவரை உலகின் சிறிய மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இவரது உயரம் 27 இன்ச். இவரை விட ஜுன்ரே 5 இன்ச்கள் குறைவு.

கின்னஸ் மனிதர் !
##~##

பதினேழு வயதாகும் ஜுன்ரே ஒரு வயதே ஆன குழந்தையின் அளவுதான் இருக்கிறார். வரும் ஜூன் மாதம் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடப் போகிறார். இவரால் நீண்ட நேரம் நிற்கவும், நடக்கவும் முடியாது. என்றாலும்  உலகின் மிகச் சிறிய மனிதர் என்பதைப் பெருமையாக எண்ணுகிறார்.

மகனுக்கு இரண்டு வயதானபோதுதான் ''அவனிடம் ஏதோ குறை இருப்பதை உணர முடிந்தது.'' என்கிறார் ஜுன்ரேவின் அம்மா கன்ஸப்சியன்.

கின்னஸ் மனிதர் !

''அடிக்கடி அவனது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அவன் வளரவும் இல்லை. அதனால், மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவனைப் பார்த்து மருத்துவரே குழம்பிவிட்டார். ஜுன்ரேவை வீட்டில் விட்டு  விட்டு என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் எப்பொழுதும் இருக்க வேண்டும். அவன் வலியுடனேயே வாழ்கிறான். இருந்தாலும், விரைவில் உலகின் மிகச் சிறிய மனிதன் என்று அறிவிக்கப்போகிறார்கள் என்று நான் சொன்னபோது, பெருமையுடன் சிரித்தான்'' என்கிறார்.

-ஜெனிவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு