Published:Updated:

சுட்டிகளின் ஆங்கிள் !

சுட்டிகளின் ஆங்கிள் !

பிரீமியம் ஸ்டோரி

கே.கணேசன்

அங்கிள் பை!

இந்தப் பெயரைக் கேட்டாலே சுட்டிகளுக்கும் பெற்றோர்களுக்கும் அமர் சித்ரகதா, டிங்கிள் புத்தகங்களின் நினைவு வந்துவிடும். பாட்டி, அம்மா, சுட்டி என மூன்று தலைமுறைகளும் ரசித்துப் படிக்கும் அமர் சித்ர கதைகளை உருவாக்கியவர். இயற் பெயர் ஆனந்த் பை. 1929-ல் கர்நாடகாவில் பிறந்த ஆனந்த் பை, கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்தார்.

சுட்டிகளின் ஆங்கிள் !
##~##

இவருக்கு காமிக்ஸ் புத்தகங்கள் ரொம்பவும் பிடிக்கும். எனவே, சுட்டிகளுக்காக 'மனவ்’ என்ற இதழினை ஆரம்பித்தார். அது அவர் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. அதனால், அதை நிறுத்திவிட்டார். பின்னர், அவர் தொலைக்காட்சியில் ஒரு க்விஸ் நிகழ்ச்சியை நடத்தியபோது ஒரு விஷயம் அவரது கவனத்துக்கு வந்தது. அது, சுட்டிகளுக்கு நமது இதிகாசப் புராணங் களைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதைப் பற்றி யோசித்த ஆனந்த் பை, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, அமர் சித்ரகதா என்ற பெயரில் கிருஷ்ணா அவதாரத்தை காமிக்ஸ் வடிவில் புத்தகங்களாக வெளியிட்டார்.  

சுட்டிகளின் ஆங்கிள் !

இந்தப் புத்தகங்கள் சுட்டிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து இன்று வரை 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு இதிகாசக் கதை மாந்தர்களை வைத்து அமர் சித்ரக்கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. ஆங்கிலம் உட்பட நாற்பது மொழிகளில் இவை வெளியாகி உள்ளன.

அமர் சித்ரக் கதாவுடன் திருப்தி அடையாத ஆனந்த் பை, 'ட்விங்கிள்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக மாத இதழையும் நடத்தினார். இதில் சுட்டிகளின் சந்தேகங்களை அங்கிள் பை என்ற பெயரில் எழுதித் தீர்த்து வைத்தார். சுட்டிகள் எழுதும் மாற்றங்களைப் பத்திரிகையில் செய்ததுடன் நில்லாமல், அவர்களின் படங்களை அப்பகுதியில் போட்டு சுட்டிகளை கௌரவித்தார். இதனால், அங்கிள் பை இன்னும் பிரபலமானார்.

புராணக் கதைகளுக்கு உயிரூட்டிய அங்கிள் பை, கடந்த பிப்ரவரி 24 அன்று காலமானார். அங்கிள் பை அமரரானாலும் அவரது அமர் சித்ரக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் சிரஞ்சீவிகளாக நம் மனதில் என்றும் உலா வருவார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு