பிரீமியம் ஸ்டோரி

தீப் பொறி !

பிட்ஸ்

சர் சி.வி.ராமன் இளம் வயதிலேயே அறிவாளியாக விளங்கினார். ஆனால், எந்த வேலையையும் மன ஒருமைப்  பாட்டுடன் செய்யாமல், திசை மாறிக் கொண்டே இருப்பார். இது, அவர் அம்மாவுக்கு வருத்தத்தை அளித்தது. ஒரு நாள், ராமனிடம் பூதக் கண்ணாடியையும் தாளையும் கொண்டு வரச் சொன்னார். தாளைக் கீழே போட்டு, பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டினார். ஆனால், கைகளை இங்கும் அங்குமாக அசைத்தபடி இருந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தாளில் நிலையாகக் காட்டி  னார். சில நிமிடங்களில் தாளில் தீ பிடித்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம், ''பார்த்தாயா... ஆற்றல் மிக்க சூரியக் கதிராகவே இருந்தாலும் ஒருமுகப்படுத்தாவிட்டால் எந்தப் பயனும் இல்லை'' என்றார்.

தன் தாய் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்ட ராமன், மனதில் அதைப் பதிய வைத்துக் கொண்டார். பிற்காலத்தில் நோபல் பரிசைப் பெற்று உலகமே போற்றும் விஞ்ஞானியாக மாறினார்.

    -என்.பிரியதர்ஷினி-(VI),
மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, சென்னை.

விலை !

பிட்ஸ்

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாஸோ, ஒருநாள் மர பீரோ ஒன்றை வாங்க கடைக்குச் சென்றார். கடைக்காரருக்கு அவரை அடையாளம் தெரிந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அங்கு இருந்த மர பீரோக்களைப் பார்த்தார். எதுவும் திருப்தி இல்லை. பிகாஸோ, தான் மனதில் நினைக்கும் பீரோவின் அமைப்பைப் பற்றி கடை முதலாளியிடம் கூறினார். அவருக்கு சரியாகப் புரியாததால் ஒரு காகிதத்தை எடுத்து அதில் பீரோவின் படத்தை வரைந்தார். ''இந்த மாதிரி பீரோவைச் செய்ய எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டார்.

கடைக்காரர் அந்தப் படத்தைக் காட்டி, ''நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். இந்த பீரோவுக்கு ஈடாக நீங்கள் வரைந்திருக்கும் இந்தப் படத்தின் கீழே உங்கள் கையெழுத்தை மட்டும் போட்டு எனக்குக் கொடுத்து விடுங்கள் அது போதும் எனக்கு'' என்றார்.

     -ர.சு. ப்ரணவ் தீபக்IX),
மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

எத்தனை பலங்கள் !

முருகனுக்குத் திடீரென்று ஒரு எலுமிச்சம் பழம் தேவைப்பட்டது. அரசனின் தோட்டத்தில் ஏராளமான பழங்கள் உள்ளன. அதை அடைவதற்கு ஆறு காவலர்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதை அறிந்தான் அவன்.

பிட்ஸ்

ஒவ்வொரு காவலரிடமும் தான் கொண்டுவரும் பழங்களில் பாதியும், தன் பங்கிலிருந்து ஒன்றும் சேர்த்துத் தருவதாகச் சொல்லி நுழைந்தான். சொன்னபடியே காவலர்களிடம் பழத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவன் கையில், ஒரே ஒரு எலுமிச்சம் பழம் இருந்தது.

அப்படியானால், அவன் பறித்த பழங்கள் எத்தனை?

 விடை: வெளியே வரும்போது அவனிடம் ஒரு பழம் இருந்தது. கடைசி வாசலைக் கடக்கும்போது அவனிடம் 4 பழங்கள் இருந்திருக்கும். காவலனிடம் பாதி 2 பழமும் தன் பங்கில் ஒரு பழமும் ஆக மொத்தம் மூன்று பழங்கள் தந்திருப்பான். இப்படியே இரண்டாம் வாயிலைக் கடக்கும்போது 10 பழங்களும். மூன்றாம் வாயிலில் 22. நான்காம் வாயிலில் 46. ஐந்தாம் வாயிலில் 94.  ஆறாம் வாயிலை அவன் கடக்கும்போது 190. ஆகவே, அவன் பறித்த பழங்கள் 190.

பிட்ஸ்

காதாலே காற்றடிப்பேன் !

சுட்டீஸ்! உங்களிடம் பலூன் தந்து ஊதச் சொன்னால், அதை நீங்கள் வாயால் ஊதி பெரிதாக்குவீர்கள். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஜாங் ஸிஜியாங் (ஞீலீணீஸீரீ ஙீவீழீவீணீஸீரீ) அப்படி கிடையாதுங்க... இவரிடம் சைக்கிள் டயருக்கு வாயால் ஊதி காற்று அடிக்க முடியுமா என்று பந்தயம் வைத்தால், அதற்கு ஜாங் என்ன சொல்லுகிறார் தெரியுமா... ''ஏன் காதால் காற்றடித்தால் நீங்கள் மறுப்பு ஏதும் சொல்வீர்களா?'' என்று கேட்கிறார். இது உண்மைதான் சுட்டீஸ்! 36 வயதாகும் ஜாங், மூக்கினால் சுவாசிப்பதுபோல் காது வழியாகவும் காற்றை இழுத்து, விடுகிறார்.

பிட்ஸ்

சிறுவயதிலேயே காதால் பலூன் ஊதுவதை பெற்றோர்கள் பார்த்துப் பயந்து போய், உடனே டாக்டர்களிடம் காண்பித்தனர். அவர்களும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, நோ பிராப்ளம் என்று சொல்லி விட்டார்கள். பிறகென்ன கவலை. ஜாங், காதாலயே பலூன்களை ஊதி அனைவருடைய கவனத்தையும் தன்பக்கம் திருப்புகிறார்.

-ஜோஸ்னா, சென்னை.

  
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு