Published:Updated:

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

Published:Updated:

க்ளூ விகடன்.
பொழிந்த பனி, எழுந்த அச்சு!
பொழிந்த பனி, எழுந்த அச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!
இரா.மன்னர் மன்னன்.
பொழிந்த பனி, எழுந்த அச்சு!
பொழிந்த பனி, எழுந்த அச்சு!

ற்செயலாகக் கிடைக்கும் 'க்ளூ'க்கள்தான் உலகின் பெரும் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம். ஆய்வு மனப்பான்மையும் திடீரெனக் கிடைக்கும் 'க்ளூ'வும் இணைந்தால் அட்டகாசக் கண்டு பிடிப்புகள்!

நியூட்டனின் முன்பு விழுந்த ஆப்பிள் அவருக்குக் கிடைத்த க்ளூ! அதை உலகம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தது அவரது ஆய்வு மனப்பான்மை. இதன் விளைவே இன்று ரீஃபில் முதல் ராக்கெட் வரை சாத்தியப்படுத்துகிறது நியூட்டனின் விதிகள். இதுபோலவே குளிக்கும்போது கிடைத்த க்ளூவை வைத்து ஆர்க்மிடிஸ் நீரைக்கொண்டு தங்கத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டுஅறிந்தார். ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னும் ஏதேனும் ஒரு க்ளூ இருக்கும்!

18-ம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெனிட்டா என்ற சிறுமி தன் பெயரை மரத்தின் வேரில் கத்தியைக்கொண்டு செதுக்க முயற்சி செய்கிறாள். அதனைக் கண்ட ஜெனிட்டாவின் அப்பா அவரே செதுக்கித் தருகிறார். வெட்டப்பட்ட தன் பெயர் பனியால் மூடப்படுவது ஜெனிட்டாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே, பைபிளை எழுத அவள் அப்பா தயாரித்து வைத்திருந்த காகிதம் ஒன்றை எடுத்து மரத்தின் அந்தப் பகுதியை மூடுகிறாள். அதன் மீது பனி படுகிறது. அடுத்த நாள் அங்கே வந்த ஜெனியின் அப்பா மரத்தில் செதுக்கிய பெயர், தாளில் பதிந்திருப்பதைக் கண்டு, அதை பத்திரப்படுத்துகிறார். பின்னாளில் அந்தத் தாளைக் கண்ட கூட்டன்பர்க் அச்சு முறையைக் கண்டுபிடித்தார்!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

லியனார்டோ டாவின்சி தன் நாட்டு அரசில் பல நல்ல பொறுப்புக்களில் இருந்தவர். ஒருமுறை அவரிடம் நாட்டின் இடப் பரப்புகளை அளவிடும் வேலை கொடுக்கப்படுகிறது. 'டேப் போன்றவற்றைக் கொண்டு அளந்தால் வேலை அதிக நாட்கள் பிடிக்கும்' என்று கண்ட டாவின்சி, ஒரு சிறிய வண்டியில் புதுமையான

பொழிந்த பனி, எழுந்த அச்சு!

கருவி ஒன்றை அமைக்கிறார். வண்டியின் சக்கரம் சுத்துவதைக்கொண்டு அது எவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதை அந்தக் கருவி காட்டும். இந்தக் கருவியின் மூலம் அவர் அளவிடும் வேலைகளை எளிதில் செய்தார்.

பின் நாட்களில் பைக், கார் போன்ற வாகனங்கள் வந்தபோது அவை லிட்டருக்கு எவ்வளவு கிலோ மீட்டர் தருகிறது, எவ்வளவு தூரத்தை ஓடிக் கடந்திருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி வர.. டாவின்சி பழைய அமைப்பில் கொடுத்திருந்த 'க்ளூ'க்களின் அடிப்படையில் 'தூரம் காட்டும் கருவி' கண்டுபிடிக்கப்பட்டது!

பொழிந்த பனி, எழுந்த அச்சு!
பொழிந்த பனி, எழுந்த அச்சு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism