இந்த வழக்கை விசாரித்துக்கொண்டு இருந்த தனியார் துப்பறியும் நிபுணரிடம் வந்து சேர்ந்தது ஒரு கடிதம். 'நான்தான் டேவிட் - சன் ஆஃப் சாம். என் தந்தைக்கு மனித ரத்தம் குடிக்க வேண்டும். என்னுடைய தந்தை சிறு வயதில் இருந்தே என்னைக் கொடுமைப்படுத்தினார். பெரியவன் ஆகும் வரை என்னை கார் காரேஜில் தனிமையில் அடைத்து வைத்தார். எனக்கு அதன் மீது தீராத வெறி. சாம்தான் என்னை வெளி உலகுக்குச் சென்று கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவருக்கு இளமை திரும்பவும், ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கவும் நான் நிறையப் பேரைக் கொலை செய்து, அவர்களின் ரத்தத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். விரைவில் என்னைக் கொலை செய்துவிடுங்கள். இல்லை என்றால், உங்களுக்குத்தான் நஷ்டம்' என்று விவரித்தது அந்தக் கடிதம். சுதாரித்து முகவரி தேடி ஓடினால்... ஆள் அம்பேல்!
'என்ன நீங்க... தத்தியா இருக்கீங்க. ஓர் ஆளை முடிச்சிட்டு சீக்கிரம் நானே வர்றேன்' என்று இன்னொரு கடிதத்தையும் அனுப்பிவைத்தான் 44 காலிபர். கடைசியாகக் கொலை செய்த இடத்தில், 'நான்தான்ப்பா சீரியல் கில்லர். போலீஸ் வந்தா இந்த அட்ரஸைக் கொடுத்து வரச் சொல்லு' என்று பார்க்கிங் டோக்கன் வாங்கும் இடத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனான்.
|