Published:Updated:

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

Published:Updated:

க்ளூ விகடன்.
வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!
வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!
இரா.மன்னர் மன்னன், ஞா.அண்ணாமலைராஜா, லதானந்த்.
வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!
வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

சில துப்புத் துளிகள்...

'For a few dollars more' என்கிற கௌபாய் படம் முழுக்க துப்புக் கொடுப்பதைப்பற்றித்தான்! தேடப்படும் குற்றவாளியைப்பற்றி ஒரு கும்பல் துப்புக் கொடுத்துப் பரிசு வாங்கும். அவனைத் தூக்கில் போடும் சமயம், அதிரடி செய்து காப்பாற்றி விடுவார்கள். அவனைத் 'தேடப்படும் குற்றவாளி'யாக அறிவித்திருக்கும் அடுத்த மாகாண அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் அவனைக் காட்டிக் கொடுத்துப் பரிசு பெறுவார்கள்!

காட்டுக்குள் மனித நடமாட்டம் இருந்தால், ஆள் காட்டிக் குருவி என்கிற ஒரு குருவி கூவி மற்ற விலங்குகள், பறவைகளை எச்சரிக்கும். தேடுதல் வேட்டைக் காக போலீஸ் நுழையும்போதெல்லாம் இதைத் துப்பாக வைத்துக் கண்டுபிடித்து இடத்தைக் காலி செய்துகொண்டு இருந்தான் வீரப்பன்!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

ஜேம்ஸ்பாண்ட் நாவலில் அறையை விட்டு வெளியேறும்போது கதவையும், நிலையினையும் இணைத்து ஒரு முடியினை ஒட்டிச் செல்வார் பாண்ட். முடி விலகியிருந்தால் யாரோ கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அதுதான் அவருக்குத் துப்பு!

இயற்கைப் பேரழிவு ஏற்படுவதற்கு முன் விலங்குகள் மனிதர்களுக்குத் துப்புக் கொடுக்கும். நாய்கள் சம்பந்தமே இல்லாமல் கூட்டமாகக் குரைக்கும். பறவைகள் ஒரு குழுவாக, இரைச்சலோடு பறந்து செல்லும். துறவி நண்டு என்கிற ஒருவகை நண்டு பின்பக்கமாக நடக்கும். இதெல்லாம் நடந்தால் பூகம்பமோ, சுனாமியோ வரப் போகிறது என்று அர்த்தம். மனிதனுக்குத் தெரியாத இந்த க்ளூக்கள் உயிரினங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்பது பிரபஞ்ச ரகசியம்!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

உலகின் மிக மோசமான போர் வாகனம் 'நீர்மூழ்கிக்கப்பல்' தான். இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கியைக் குறிவைத்துத்தாக்கு பவர்களால் அது தப்பித்ததா, அழிந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழிந்தா லும் இருந்தாலும் அது நீரின் மேலே வராதே! ஒரு சின்ன க்ளூவை வைத்துதான் நீர்மூழ்கி அழிந்ததைக் கண்டுபிடிக்க ஆரம் பித்தார்கள். தாக்குதலில் பாதிப்படைந்து நீர்மூழ்கி நீரில் மூழ்கி யதும், அதிலிருந்து வெளியாகும் எரிபொருள் நீரின் மேலே மிதப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதைவைத்து நீர் மூழ்கி தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்!

நன்றாகப் பயிற்சிபெற்ற குற்றவாளிகளால் தங்கள் கையெழுத்தைக்கூட அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அவர்களின் எழுத்துப் பிழைகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும். திறமையான தீவிரவாதி களாகக் கருதப்படும் பலர், சரியான அடிப்படைக் கல்வி இல்லாதவர்கள். இதனால் எழுத் துப் பிழையோடு எழுதுவார்கள். உலகெங்கும் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் உரு வாக்கும் போலி பாஸ்போர்ட்டில் Government என்ற வார்த்தையில் r' எழுத்தை மட்டும் விட்டுவிடுவார் கள். இந்தச் சின்ன க்ளூவால் சிக்கிய குற்றவாளிகள் நிறையப் பேர்!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் திடீரென திருட்டு, வழிப்பறி, தெருச்சண்டை போன்ற சிறு குற்றங்கள் குறைந்து விட்டன. 'ஏன் குற்றங்கள் குறைகின்றன?' என்று ஆய்வு செய்தார்கள் காவலர்கள். 'சிறையில் முன்பைவிட 'டீன்-ஏஜ்' குற்ற வாளிகள் குறைவாக இருக்கிறார் கள்!' என்று துப்புக் கிடைத்தது. அன்றில் இருந்து சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்தான், 'தவறா கக் கருத்தரித்தவர்கள் கருக் கலைப்பு செய்வதை அனுமதிக்கும் சட்டம்' அங்கே அமலாக்கப் பட்டது. அதன் விளைவாக, தவறாகப் பிறந்து, கேட்பாரற்று வளரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து, குற்றமும் குறைந்தது கண்டு பிடிக்கப்பட்டது!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!

ஜேக் தி ரிப்பர் என்கிற பட்டப் பெயரைக் கொண்டவன் 1888-ல் கிழக்கு லண்டனில் பல பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்தவன். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 40 விலைமாதர்களை முகத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றான். அப்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜேக்கைப்பற்றித் துப்புக் கடிதங்களை போலீஸுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால், ஜேக்கின் உண்மையான பெயரைக்கூட போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை அதிகத் துப்பு கொடுக்கப்பட்டு, யாரென்று கண்டுபிடிக்கவே முடியாத குற்றவாளி என்கிற பெருமை ஜேக்கிற்கு உண்டு!

வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!
வீரப்பனுக்கு துப்புக் கொடுத்த பறவை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism