நாணயங்கள், கல்வெட்டுக்கள் - வரலாற்றைக் கணிக்க உதவும் க்ளூக்கள் இவைதான். அரசர் கால வரலாற்றைக் கண்டுபிடிக்கவும், ஏற்கெனவே உள்ள வரலாற்றுக் குறிப்புகளைச் சரிபார்க்கவும் இவைதான் உதவும்.
1980-ம் ஆண்டு வரையிலும் 'சங்க காலத் தமிழர்கள் பண்டமாற்று முறையில்தான் வியாபாரம் செய்தனர்' என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வந்தனர். அதன் பின்னர்தான் பாண்டியன் பெரு வழுதியின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை தெரியவந்தது. பழங் கால நாணயத்தின் வடிவம், உலோகம், பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், குறியீடுகள் எல்லாமே வரலாற்றின் மர்மத்தைத் திறக்க உதவும் க்ளூக்கள் தான்!
மிகச் சிக்கலான வரலாற்றையும், அதனைக்கண்டு பிடிப்பதற்கான அதிக க்ளூக்களையும்கொண்ட நாணயம் பிற்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட 'கச்சி வழங்கும் பெருமாள்'. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் 'கச்சி வழங்கும் பெருமாள்' என்ற வாசகம் மூன்று வரிகளில் எழுதப்பட்டு இருக்கும். மறு பக்கத் தில் ஒரு மீன் அல்லது இரண்டு மீன்களின் உருவம் இருக்கும். இதன் வரலாற்றைக் கண்டுபிடிப்பதில் இருந்த சிக்கல் என்னவென்றால், மீன் குறியீடு பாண்டியர்களுக்கானது. அந்த வாசகமோ 'காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள்' என்று பல்லவர்களின் தலைநகரத்தில் உள்ள |