'எரிகற்களின் வருடம்' (1859-60) என்பது அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய பிரபலமான ஒரு கவிதை. இந்தக் கவிதையில், 'எரிகற்களின் ஊர்வலம்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி, தான் கண்டு ரசித்த எரிகற்களின் பேரணியைச் சிலாகித்திருப்பார். அந்தக் கவிதையில் எரிகற்களின் ஊர்வலம் எப்போது, எங்கு நடந்தது என்று அவர் குறிப்பிடவில்லை. அந்த அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்ற தேதியையும், நேரத்தையும் தெரிந்துகொள்ளப் பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 150 வருடங்கள் கழித்து அந்தப் புதிருக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
தேதியைக் கண்டுபிடித்த விதத்தை டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியல் தடய நிபுணர்கள் 'ஸ்கை அண்ட் டெலிஸ்கோப்' என்ற இதழில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 150 வருட ரகசியத்தைத் திறக்க, ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருந்தது ஓர் ஓவியம். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபெடரிக் சர்ச் என்ற ஓவியன் வரைந்தது. இரண்டு வாரங்களுக்குமுன் ஆராய்ச்சியாளர் ஓல்சன் என்பவர் ஓவியக் கண்காட்சிபற்றிய ஒரு நூலை சும்மா புரட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். அதில் ஃபெடரிக் எரிகற்களைப் பற்றி ஓவியம் வரைந்திருப்பதாக ஒரு வரி கண்ணில் பட்டிருக்கிறது. ஓல்சன் அதை அலட்சியப்படுத்தாமல் ஒருவேளை 'எரிகற்களின் ஊர்வலம்'பற்றி ஃபெடரிக் |