Published:Updated:

'ஸ்க்ரூ'வே குரு!

'ஸ்க்ரூ'வே குரு!

'ஸ்க்ரூ'வே குரு!

'ஸ்க்ரூ'வே குரு!

Published:Updated:

க்ளூ விகடன்.
'ஸ்க்ரூ'வே குரு!
'ஸ்க்ரூ'வே குரு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஸ்க்ரூ'வே குரு!
லதானந்த்.
'ஸ்க்ரூ'வே குரு!
'ஸ்க்ரூ'வே குரு!

குற்றங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்குக் கூர்மையான பார்வையும் நுண்ணறிவும் தேவை. சில சமயங்களில் ஒரு ஸ்க்ரூஆணி கூடத் துப்புக் கொடுக்கலாம்.

ஒருமுறை வனத்துறை அதிகாரிகள் சந்தனக் கடத்தல் தடுப்பு வாகனச் சோதனைக்குப் போனார்கள். ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேன் காலியாகப் பல்லடம் பக்கம்வந்து கொண்டு இருந்தது. அதை நிறுத்தி விசாரித்தார்கள். வழக்கம்போல வண்டியின் டிரைவர் தனியாகவும் அவரது உதவியாளர் தனியாகவும் விசாரிக்கப்பட்டனர். கேள்விகள் மிக எளிமையானவை. 'எங்கிருந்து புறப்பட்டீர்கள்? எத்தனை மணிக் குப் புறப்பட்டீர்கள்? யாரெல்லாம் வந்தார்கள்? எங்கே டீசல் போட் டீர்கள்?' இப்படி ஆரம்பித்து சுமார் 50 கேள்விகள் இருக்கும்.

பிறகு, இரு அணியும் தங்களுக்குக் கிடைத்த பதில்களை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அதில் பதில்கள் வித்தியாசமாக வந்து விழுந்தால், பிறகு சிறப்புக் கவனிப்பு துவங்கும். வாகனம் இன்னும் அங்குலம் அங்குலமாக அலசப்படும். மேற்படி வாகன ஓட்டி மற்றும் அவரது உதவியாளரின் பதில்களில் ஏகப்பட்ட முன்னுக்குப் பின் முரண். எனவே, வாகனம் தீவிரமாக ஆராயப்பட்டது. அந்த வாகனத்தில் பயணிகள் உட்காரும் இருக்கைகளுக்குக் கீழே ஒரு விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. அதை விலக்கிப் பார்த்தால் அலுமினியத் தளம் இருந்தது. பல சதுர வடிவ அலுமினியத் தகடுகளால் அமைக்கப்பட்டு இருந்தது அந்தத் தரைப்பகுதி. உற்று நோக்கியதில் ஒரு சதுர வடிவத் தகட்டின் அருகில் பளபளவென்று மிக மெல்லிய கோடுகள் தென்பட்டன. ஸ்க்ரூ ஆணியைத் திருப்பும்போது ஸ்லிப் ஆனதால் ஏற்பட்ட கீறல்களாக அவை இருக்கும் எனத் தோன் றியது. அந்த அலுமினிய பிளேட்டில் பொருத்தி இருந்த நான்கு ஸ்க்ரூ ஆணிகளின் கொண்டையில் உள்ள சிறு கீற்று பளபளப்பாக இருந்தது. ஆனால், ஏனைய ஸ்க்ரூக்களின் கொண்டையில் அந்தக் கீற்று அழுக்கால் நிரம்பியிருந்தது. அதாவது, அந்த பிளேட் மட்டும் அடிக்கடி திறந்து மூடப்பட்டு இருக்கிறது. ஆனால், அதைத் திறக்க வேண்டிய அவசியமே இல்லை.

வண்டியின் டூல்ஸ் பாக்ஸில் இருந்தது அந்த ஸ்க்ரூக்களைத் திறக்கும் ஸ்பேனர். எடுத்துத் திறந்து பார்த்தால் எதிர்பார்த்த படியே அந்த அலுமினிய சதுரப் பிளேட்டுக்கும் கீழே ஒரு ரகசிய அறை. அதில் பதுக்கிவைக்கப் பட்டு இருந்தன, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சந்தனக் கட்டைகள். ஒரு சிறிய ஸ்க்ரூவின் உதவியால் சிக்கினார்கள் களவாணிகள்!

'ஸ்க்ரூ'வே குரு!
'ஸ்க்ரூ'வே குரு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism