Published:Updated:

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

Published:Updated:

க்ளூ விகடன்.
வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!
வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!
பா.ஜெயவேல்.
வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!
வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

மெரிக்காவையே ஆட்டிப்படைத்த விஷயம்... வாட்டர்கேட் ஊழல்! வெள்ளை மாளிகையின் தில்லாலங்கடி கேடிகளைப்பற்றி, 'வாஷிங்டன் போஸ்ட்' என்னும் பத்திரிகை தொடராகவே எழுதியது. 'இவர்களுக்கு மட்டும் இந்த ஊழல் விஷயங்கள் எப்படித் தெரிகின்றன?' என்று அதிகாரவர்க்கமும், மற்ற பத்திரிகைகளும் தலையைப் பிய்த்துக்கொண்டன.

'டீப் த்ரோட்' என்ற புனைபெயரைக் கொண்டவர் 'வாஷிங்டன் போஸ்ட்'டைத் தொடர்புகொண்டு, 'வெள்ளை மாளிகையில் நடக்கக்கூடிய முக்கிய ஊழல்கள்பற்றி க்ளூ கிடைத்திருக்கிறது. நான் அதை உங்களுக்குத் தருகிறேன். ஆனால், நான் யார் என்று கடைசிவரை வெளியிடக் கூடாது. நான் இறந்த பின்தான் என்னைப் பற்றி அறிவிக்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்தார். அதற்கு அந்தப் பத்திரிகையும் சம்மதித்தது. க்ளூவை வைத்து வாஷிங்டன் போஸ்ட்டின் இரண்டு நிருபர்கள் மொத்த வாட்டர்கேட் ஊழலையும் அம்பலப் படுத்தினார்கள். டீப் த்ரோட் யார் என்று அமெரிக்காவே தேடியது.

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

ஊழல் விவகாரம் கோர்ட் படி ஏறியது. அமெரிக்க அதிபர் நிக்ஸன் பதவி விலக வேண்டிய சூழல். 'யார் அந்த டீப் த்ரோட்?' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தார்கள். 'டீப் த்ரோட் உயிரோடு உள்ளாரா, இறந்துவிட்டாரா என்கிற விவரங்கள் எல்லாம் தெரியாது. ஆனால், அவர் அமெரிக்காவின் ஹீரோ' என்றது வாஷிங்டன் போஸ்ட். அதிகாரிகளின் நச்சரிப்பு தாங்க முடியாமல், 'அவர் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் நிர்வாகத்தில் வேலை செய்யக்கூடிய ஓர்ஆண். அவர் அதிகமாக சிகரெட்

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!

பிடிப்பார். நிறைய ஸ்காட்ச் குடிப்பார்' என்று க்ளூ மட்டும் கொடுத்தது வாஷிங்டன் போஸ்ட். இந்த க்ளூக்களை வைத்து அவ்வளவு பெரிய நாட்டில் யாரைக் கண்டுபிடிக்க முடியும்? 33 வருடங்கள் கழித்து, ஓய்வு பெற்ற அமெரிக்க எஃப்.பி.ஐ. ஏஜென்ட் வில்லியம் மார்க்பெல்ட் 'நான்தான் அந்த டீப் த்ரோட்' என்று அறிவித்தார். அப்போது வாஷிங்டன் போஸ்ட் எதுவும் சொல்லவில்லை. அவர் இறந்ததும், 'ஆம், இவர்தான் டீப் த்ரோட்!' என்று அறிவித்து, கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றிக் கொண்ட பெருமை தேடியது வாஷிங்டன் போஸ்ட்!

வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!
வாட்டர் கேட் திறந்த 'டீப் த்ரோட்'!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism