Published:Updated:

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

Published:Updated:

க்ளூ விகடன்.
ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!
ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!
பா.முருகானந்தம்.
ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!
ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால், இன்றுவரை துப்பறியும் புலி என்றால், அது சந்தேகமே இல்லாம ஷெர்லக் ஹோம்ஸ்தான்!

சர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய இந்தக் கதாபாத்திரம், வாசகர்களின் நெஞ்சங்களில் அழியாத இடத்தைப் பிடித்தது. ஒவ்வொரு வழக்கையும் ஷெர்லக் துப்பறியும் விதமும், வழக்கின் சிக்கலானமுடிச்சுக் களை அவிழ்க்கத் தனக்கு உபயோகமாக இருந்த க்ளூக்கள் என்று அவர் விவரிக்கும் பாங்கும் படிப்பவரைப் பிரமிப்புக்கு உள்ளாக்கும்.

தனியார் டிடெக்டிவ்களுக்கு ஷெர்லக் ஹோம்ஸ்தான் ரோல்மாடல். கானன் டாயில் எழுதிய நான்கு நாவல்கள், 56 சிறுகதைகள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிக்கலான வழக்கினை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும்.

'சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் நீர்த்துளியைவைத்தே அந்த நீர்த் துளியானது அட்லாண்டிக் கடலைச் சேர்ந்ததா? நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து வந்ததா?' என்று கண்டுபிடிக்கும் அளவுக்குத் துப்பறியும் நிபுணர்கள் திறமையாகச் சிந்திக்க வேண்டும்' என்று ஹோம்ஸ் ஓர் இடத்தில் கூறுவார்.

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

மேலும், 'ஒரு குற்றத் துக்குச் சாத்தியம் இல்லாத விஷயங்களை ஒதுக்கி விடுங்கள். மிஞ்சி இருப்பது நம்ப முடியாததாக இருந் தாலும், அதுதான் உண்மையாக இருக்கும்' என்கிற ஹோம்ஸின் விதி துப்பறியும் நிபுணர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

சிறு சிறு தடயங்களைக் கூட விடக் கூடாதுஎன்பது தான் ஹோம்ஸின் தாரக மந்திரம்.

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!

ஷூ, டயர் சின்னங்கள், கை ரேகைப் பதிவுகள், கையெழுத்துக் களைத் தீவிரமாக ஆராய்தல், துப்பாக்கிக் குண்டுகள், சிகரெட் துண்டுகள், ஆஷ்ட்ரேயில் சிந்திஇருக்கும் சாம்பல் துணுக்குகள், நகம், முடி என்று ஒன்றையும் விடாமல் சுரண்டி எடுப்பார் ஹோம்ஸ். தேவையெனில் பூதக் கண்ணாடி, ரசாயனப் பரிசோதனை கள் போன்றவற்றையும் பயன்படுத்த அவர் தயங்கியதே இல்லை.

குறிப்பிட்ட கதையில் ஹோம்ஸ் இறந்துவிடுவதாக அமைத்திருந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பவே அவருக்கு மீண்டும் உயிரூட்டி அடுத்த கதையில் கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு டாயில் தள்ளப்பட்டார். இதைவிட ஒரு துப்பறிவாளன் கேரக்டருக்கு வெறென்ன பெருமை வேண்டும்?

ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!
ஷெர்லக் ஹோம்ஸ் இறந்தபோது?!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism