Published:Updated:

சிக்கு புக்கு குக்கு !

சிக்கு புக்கு குக்கு !

பிரீமியம் ஸ்டோரி

ஹாய் சுட்டீஸ்!  வெயிலைத் தணிக்கும் இயற்கையின் வரமான இளநீரையும், உடலுக்கு ஆற்றலை அள்ளித்தரும் பாதாம் பருப்பையும்   வைத்து, இரண்டு ரெசிபிகளை வசந்தா விஜயராகவன் செய்யச் சொல்லித் தந்திருக்கிறார். உங்க அம்மாகிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்க..! இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களையும் அவற்றின் சிறப்புகளையும் விளக்குகிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

இளநீர் ஸ்வீட் மிக்சர்!

சிக்கு புக்கு குக்கு !

தேவையானவை:

 

இளநீர் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், வறுத்த அவல் (எண்ணெய் இல்லாமல்) - ஒரு கப், ரஸ்தாளி வாழைப்பழம் - இரண்டு, இளநீர் - இரண்டு கப், வெல்லத்தூள் - அரை கப், இஞ்சிச் சாறு - இரண்டு டீஸ்பூன்.

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் (இளநீரைத் தவிர) நன்கு கலந்து, உயரமான கண்ணாடி டம்ளரில் பாதி அளவு போட்டுக்கொள்ளவும். மேலே கால் கப் இளநீரை ஊற்றி, நீளமான ஸ்பூன் போட்டு மதிய நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

கிடைக்கும் சத்துக்கள்:

சிக்கு புக்கு குக்கு !
சிக்கு புக்கு குக்கு !

ஆற்றல் - 907 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 200 கிராம்

ப்ரோட்டீன் - 15 கி

கொழுப்பு - 4.7 கி

கால்சியம் - 222 மில்லி கிராம்

இரும்பு - 17 மி.கி

பீட்டா கரோட்டின் - 244 மை. கி

வைட்டமின் சி - 30 மி.கி

டயட்டீஷியன் கமென்ட் : இளநீர், மரத்தில் இருந்து கலப்படம் இல்லாமல் கிடைப்பதால் அதில் இயற்கையிலேயே தாது உப்புக்கள் தேவையான அளவு இருக்கின்றது. அதுவும் தவிர, இளநீர் உடலினைக் குளிர்ச்சியாக்கும். இந்தக் கோடைக் காலத்துக்கு மிகவும் நல்லது. இளநீருடன் சேர்க்கும் இஞ்சி, வாழைப்பழம் போன்றவை செரிமானத்துக்கு மிகவும் ஏற்றது. இந்த இளநீர் ஸ்வீட் மிக்சரை மதிய வேளைகளில் சாப்பிட்டால் இன்னும் நல்லது.

பாதாம் மில்க் ஷேக்!

சிக்கு புக்கு குக்கு !

தேவையானவை : பாதாம் பருப்பு - அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை(அல்லது)பனங்கற்கண்டு - இனிப்புக்கு ஏற்றபடி.

செய்முறை : பாலை அடுப்பில் வைத்து நன்றாகக்  காய்ச்சவும். பாதாம் பருப்பை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து, தோலை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பால் காய்ந்து பாதி அளவு குறைந்ததும், பாதாம் விழுதைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவைத்து, தேவையான இனிப்பைச் சேர்த்து குழந்தைகளுக்கு பருகக் கொடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1525 கிலோ கலோரி

  கார்போஹைட்ரேட் - 105 கிராம்

  ப்ரோட்டீன் - 53 கி

  கொழுப்பு - 100 கி

  கால்சியம் - 350 மில்லி கி

  இரும்பு - 7 மி.கி

  பீட்டா கரோட்டின் - 2120 மைக்ரோ கி

  போலிக் - 85

டயட்டீஷியன் கமென்ட்: பாதாம் பருப்பில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு சக்தி கிடைக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பினை உடலுக்கு வழங்குகிறது. இதில் கிடைக்கும் கனிமங்கள் உடலினை உறுதி ஆக்கும்.  

படங்கள்: து.மாரியப்பன்

அவல் உப்புமா!

 

 

தேவையான பொருட்கள்: சுத்தம் செய்யப்பட்ட இரண்டு டம்ளர் அவல், தேவையான அளவு தண்ணீர், சின்ன வெங்காயம்-100 கிராம், உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய்-2, எண்ணெய் சிறிதளவு.

செய்முறை: இரண்டு டம்ளர் அவலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைக்கவும். பின், தண்ணீரை வடிகட்டி, அவலைத் தனியாக எடுத்துக்கொள்ளவும்.  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தையும்,  மிளகாயையும் போட்டு வதக்கவும். பின், சிறிது கடுகையும் கறிவேப்பிலையையும் போட்டு, அவலை அதில் கொட்டி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிண்டி, இறக்கவும். சுவையான அவல் உப்புமா தயார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு