Published:Updated:

விந்தைமிகு விண்கற்கள் !

விந்தைமிகு விண்கற்கள் !

பிரீமியம் ஸ்டோரி

த.வி.வெங்கடேஸ்வரன்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில் நான்கு விண்கற்கள் திருடு போயின. விந்தையான திருட்டு இது என்றாலும், விண்கற்கள் என்ன அவ்வளவு விலை உயர்ந்த பொருளா? அவற்றால் என்ன பயன்? இவை அறிவியல் பார்வையில் அருமையானவைதான். எனினும், விலை மதிப்பான பொருள் அல்ல!

விந்தைமிகு விண்கற்கள் !
##~##

விண்வெளி முழுவதும் பல கோடி  விண்கற்கள் இறைந்துள்ளன. நுண்ணிய மணல் அளவு முதல், பல டன் எடை கொண்ட பாறைகள் அளவு வரை இவை உள்ளன. ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சூரியனும் கோள்களும் உருவானபோது... எஞ்சிய மிச்சங்கள்தான் இந்த விண்கற்கள். சூரியனுக்கு,  கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நுண்ணிய மணல் துகள்கள் விண்கற்களில் தட்டுப்படுகின்றன.

இரும்பு செறிவான கற்கள், பாறை மற்றும் இரும்பு கலந்த கற்கள். பூமியில் மிக அரிதான தனிமங்கள் நிறைந்த கற்கள் என மூன்று விதமாக இவை காணப்படுகின்றன.

உங்கள் கைகளைப் பரபரவென ஒன்றுடன் ஒன்றை வேகமாகத் தேயுங்கள். கைகளில் வெப்பம் தெரிகிறதா? இந்த வெப்பம் உராய்வினால் ஏற்பட்டது. இதுபோலதான் விண்கற்கள் வெகு வேகத்தில் புவியின் மீது விழும் போது எழும் உராய்வினால் வெப்பம் மிகுந்து தீ பிடிக்கின்றன. இதையே நாம் எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என வானில் காண்கிறோம்.

இவை ஐநூறு கோடி ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இன்றி இருப்பதால், சூரியக் குடும்பமும் கோள்களும் எப்படி உருவாயின என்பதைக் குறித்து ஆராய விண்கற்கள் பெரிதும் உதவுகின்றன. ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி விண்கற்கள் கீழே விழுகின்றன.  

விந்தைமிகு விண்கற்கள் !

நமீபியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விழுந்த விண்கல் ஹோபா. அறுபது டன் எடை கொண்டது. இதுதான் உலகில் விழுந்த விண்கற்களில் மிகவும் பெரியது.

அதே போல 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அவுரங்காபாத் மாநிலத்தின் லோனார் கிராமத்தில் 1.8 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பெரிய விண்பாறை விழுந்தது. இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த இடம்தான் கீழே காணப்படும் லோனார் ஏரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு