Published:Updated:

சூப்பர் கலெக்டர் !

சூப்பர் கலெக்டர் !

பிரீமியம் ஸ்டோரி

சூப்பர் கலெக்டர் !

பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களையும் தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகளே பெறவேண்டும். என்ற நோக்கத்தை வெளிப்படுத்த, பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக,' வாழ்த்துக் கடிதம்’ அனுப்பியுள்ளார் மாவட்ட ஆட்சியர், முனைவர் சி.நா.மகேஷ்வரன்.

சூப்பர் கலெக்டர் !
##~##

அவரது வாழ்த்துக் கடிதத்தில், ''என் அன்புமிக்க மாணவ, மாணவிகளே... தேர்வில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அதோடு, மாநில அளவில் ரேங்க் வாங்கும் மாணவ, மாணவியருக்கு எனது சிறப்புப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது. பரிசு... சஸ்பென்ஸ்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பூஸ்ட் கடிதம் பற்றி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளைக் கேட்டால் ''உண்மையிலேயே இக்கடிதம் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.  ஆட்சியரின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.'' என்றனர்.

-இ.கார்த்திகேயன்    
படங்கள்: ஏ.சிதம்பரம்

கலக்கல் கேப்டன்கள் !

'ஸ்கூல் ஒண்ணு... கேப்டன் ரெண்டு!’ எஸ் சுட்டீஸ்... மதுரை ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக விளையாடுற ரெண்டு கேப்டன்ஸ், அவர்களோட சேர்ந்து மூணு பிளேயர்ஸும் இருக்காங்க. அதாவது, தமிழ்நாடு கைப்பந்து அணியின் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவின் கேப்டன் சந்திரபிரகாஷ், மற்றும் முகேஷ், கார்த்திக் விளையாடுறாங்க. அதேமாதிரி, 17 வயதுக்கு உட்பட்டோர் அணியின் கேப்டன் மனோஜ் கிரண், மற்றும் கபில் கண்ணன் விளையாடுறாங்க.  ஸோ ஒரே ஸ்கூல்லேயிருந்து ரெண்டு கேப்டன்ஸ்.

சூப்பர் கலெக்டர் !

கேப்டன் சந்திரபிரகாஷ் கூறும்போது... ''மதுரை மாவட்ட அளவில் நான் விளையாடியதைக் கமிட்டி மெம்பர்ஸ் பார்த்துவிட்டு என்னை தமிழ்நாட்டு அணிக்கு தேர்வு செஞ்சாங்க  அதுவும் நான்தான் கேப்டன்னதும் ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு.'' என்றார்.

ஜூனியர் அணியின் கேப்டன் மனோஜ்கிரண் சொல்லும்போது... ''நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். டீம்-ல எனக்கு ரைட் சைட் பேக் பொசிஷன்... ஆனால், அந்த பொசிஷன்ல லெஃப்ட் ஹேண்ட்ல விளையாடுறது கொஞ்சம் கஷ்டம். ஆனால், கோல் போடுறதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கும். நான் இப்ப அந்த மாதிரிதான் விளையாடுறேன். அதே சமயம் எனக்கு ரைட் ஹேண்ட்லயும் விளையாடத் தெரியும். நான் இன்னும் பெரிய அளவில் போட்டிகளை அட்டண்ட் பண்ணலை, அதெல்லாம் அட்டண்ட் பண்ணி சாதிச்சுக் காட்டுவேன். ''என்றார் அடக்கத்தோடு.

-உ.அருண்குமார்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

அசத்தல் சுட்டிகள் !

சுட்டிகளின் உலகம் ஆச்சர்யமானது. அவர்கள் கதைகள் என்றால் எல்லாவற்றையும் மறந்து கேட்க ஆரம்பித்து விடுவர்கள்.   சுட்டிகளுக்குக் கதை சொல்ல, இப்போது தனியாக ஸ்டோரி டெல்லர்களும் வந்தாச்சு.

அப்படி ஒருவர்தான் தீபா ஆத்ரேயா. நாம் சென்ற நேரம் அவர், ஹனி என்ற சிறுமி கனவுலகத்தில் செய்த சாகசத்தைப் பற்றி நடித்துக் காட்டியபடியே  கதை சொல்லிக் கொண்டிருந்தார். கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சுட்டிகளின் முகத்தில் பளிச் பிரகாசம்.

சூப்பர் கலெக்டர் !

இதில் இன்னொரு ஸ்பெஷல் என்ன என்றால், கதை கேட்கும்போதே... கொஞ்சம் இடைவேளை விட்டு சுட்டிகளே கதையில் வரும் கதாபாத்திரங்களைக் களிமண்ணில் உருவாக்குவதுதான்.

ப்ளே-டோ (றிலிகிசீ  ஞிளிபி) எனும் கலர் களிமண்ணால் வாண்டுகள் செய்த சிற்பம் ஒவ்வொன்றும் 'வாவ்’ என்று வாய்பிளக்க வைத்தது.

சூரியன், கம்பளிப் பூச்சி, படகு, பாம்பு என எல்லா கதாபாத்திரங்களும் சுட்டிகளின் எண்ணத்துக்கு ஏற்ப வண்ணமும், வடிவமும் பெற்றன.

''கதை சொல்லும் கலை இன்னும் அழியாமல் இருப்பது சுட்டிகளால்தானே?'' என்று நாம் தீபாவிடம் கேட்டோம்.

''அதுதான் உண்மை. சுட்டிகளுக்கு டி.வி பாக்கறது, வீடியோ கேம்ஸ் விளையாடுறதைவிட, கதை கேக்கறதுதான் ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல கதை கேக்கற சுட்டிகள், பெரியவர்கள் ஆனதும் கதை படிப்பாங்க. படிக்கும் பழக்கம் வந்துவிட்டால்... அப்புறம் சுட்டிகளால் இந்த உலகத்தில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.'' என்கிறார் தீபா.

-மோ.அருண்ரூப  பிரசாந்த்
படங்கள்: து.மாரியப்பன்

ஓட்ட நாயகன் !

மாவட்டம், மண்டலம், மாநில அளவில் 800-மீ,1500-மீட்டர் ஓட்டப் போட்டியில் முதல் இடத்தைத் பெற்றிருப்பவர் கே.பிரதீப். கூடலூர் என்.எஸ்.கே.பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார்.

சூப்பர் கலெக்டர் !

''ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, தடக்களப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு, 10-ஆம் வகுப்பின்போது மண்டல அளவில் முதலிடம், 11-ஆம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தை அடைந்தேன். தொடர்ந்து முயற்சி செய்து, இப்போது மாநிலத்திலேயே முதலிடம் என்று தக்க வைத்துக் கொண்டேன். இது மட்டுமல்லாமல் 'தேனி மாரத்தான்’ ஓட்டப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 5-கி.மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றேன். நான் இந்த அளவுக்கு வெற்றிபெற்றதுக்குக் காரணம், எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் கதிரேசன் அவர்கள்தான். என்னுடைய எதிர்கால குறிக்கோள், இந்திய அளவில் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் வகிக்க வேண்டும் என்பதுதும், இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ் கலந்து கொண்டு  பெருமை சேர்க்க வேண்டும்'' என்பதும்தான்.'' என்று பிரதீப் கூறுகிறார்.

-தி.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு