Published:Updated:

தலைகீழா யோசிக்கறாங்க !

தலைகீழா யோசிக்கறாங்க !

பிரீமியம் ஸ்டோரி
தலைகீழா யோசிக்கறாங்க !


கே.யுவராஜன்

சுட்டிங்க எக்ஸாம் பிஸியில இருப்பீங்க. நிருபர் ஜீபா மேட்டருக்காக உங்களை கூட்டிட்டுப் போய் டிஸ்டர்ப் பண்ணாம, இந்த முறை நான் மட்டும் போறதுன்னு முடிவு செய்தேன். 'எங்கே போகலாம்?’ என்று யோசிச்சேன்.  ''சுட்டிங்க லீவில் வீட்டில் இருந்தா வீட்டையே தலைகீழா புரட்டிடறாங்க'' என்று பெரியவங்க சொல்றதைக் கேட்டு இருப்பீங்க. அட! நிஜமாவே அப்படி தலைகீழ் வீடு, ஹோட்டல், கட்டடங்கள் உலகம் முழுக்க இருக்கே... அங்கே எல்லாம் ஒரு ரவுண்ட் போய் வருவோம் என்று  கிளம்பினேன்.  

தலைகீழா யோசிக்கறாங்க !
##~##

போலந்து நாட்டில் இருக்கிற அற்புதமான சுற்றுலா இடம் 'ஸிம்பர்க் (szymbark) மலை’. வான் உயர்ந்த மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்துக்கு நிறைய பேர்  வருவாங்க. அப்படி வந்தவங்க திகைச்சுட்டாங்க. காரணம், ஒரு மர வீடு தலைகீழாகக் கிடந்தது. 'அடடா! பெரிய புயல்கூட சமீபத்தில் வரலியே... எப்படி இந்த வீடு இப்படி ஆச்சு?’ என்று புரியாம, கிட்டே போய் பார்த்தா, 'வீட்டின் கூரைதான் தலைகீழா இருக்கு... வாசல் நேராவே இருக்கு’ என்று புரிஞ்சது.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக இப்படி வித்தியாசமாகக் கட்டி இருக்காங்க பிரபல பொறியாளர் டேனியல் சாபிக்ஸ்கி (Daniel Czapiewskis) இப்படி வித்தியாசமாக கட்டடங்களைக் கட்டுவதில் கில்லாடி. ''வழக்கமான முறையில் கட்டடங்களைக் கட்டுவதை எல்லோருமே செய்வார்களே ஜீபா. எனக்கு வித்தியாசமும் சவாலும் பிடிக்கும். அதுதான் இப்படி கட்டுகிறேன்'' என்கிறார். இப்படி வித்தியாசமாகச் செய்ய அதிக நாட்கள் பிடிக்குமே என்று நினைத்தால், அதிலும் மனிதர் சவால்விடுகிறார். சாதாரண கட்டடங் களைவிட வேகமாக கட்டிக் கொடுக்கிறார். இந்தத் தலைகீழ் வீட்டைக் கட்டுவதற்கு இவர் எடுத்துக்கிட்ட அவகாசம் 114 நாட்கள் மட்டுமே. ''சாதாரணமா மூன்று வாரத்தில் முடிச்சுடுவேன். ஆனா, இது கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ஜீபா!'' என்று வருத்தம் வேற தெரிவிக்கிறார்!

தலைகீழா யோசிக்கறாங்க !

டேனியல் கையைக் குலுக்கிட்டு அங்கே இருந்து நான் வந்த இடம், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் பிரபல தீம் பார்க் நிறுவனம் 'வொண்டர் ஒர்க்ஸ்’ (Wonder works). ஒர்லாண்டோ, பீஜியன் ஃபோர்ஜ், பனாமா நகர கடற்கரை என மூன்று இடங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுட்டிகள், பெரியவர்களின் பொழுதுபோக்குப் பூங்காவாக அசத்திட்டு இருக்கும் இதன் நுழைவு வாசலிலே சூப்பர் அனுபவம். மரத்தை வேருடன் பிடுங்கின மாதிரி இந்தக் கட்டடத்தைத் தலைகீழாக புரட்டிப் போட்டு கட்டி இருக்காங்க. மண்ணில் இருந்து பிடுங்கிய கட்டடம் எப்படி இருக்குமோ அப்படி கட்டடத்தின் மேல் பகுதியில் மணல், கற்கள், செடிகளை உருவாக்கி இருக்கறாங்க. உடைஞ்சு விழற மாதிரி தூண்கள், கட்டடத்தில் விரிசல் என தத்ரூபமாக இருக்கு. உலகின் சிறந்த பொழுதுபோக்குப் பூங்காவாக இருக்கு. இதேபோல் ஒரு தீம் பார்க்... ஸ்பெயின் நாட்டின் மொலர்க்கா என்ற இடத்தில் இருக்கும் 'ஹவுஸ் ஆஃப் காட்மண்ட்.’ நான் அங்கே போய் இறங்கினப்ப இரவு நேரம். இந்தக் கட்டடமும் தலைகீழாக வரவேற்றது. இரவு நேரத்தில் பார்க்க, இன்னும் த்ரில் மற்றும் அழகுடன் இருந்துச்சு.

தலைகீழா யோசிக்கறாங்க !

இதைவிட த்ரில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இருக்கும்  கட்டடம். 'ஹவுஸ் அட்டாக்’ என்று செல்லப் பெயர் வெச்சு இருக்கிற இது ஒரு மியூஸியம். மற்ற கட்டடங்கள் போல் தரையிலே தலை கீழாக இல்லா விட்டாலும் உயர மான கட்டடத்தின் விளிம்பில் தலை கீழாக ஒரு வீடு . எந்த நிமிஷம் தலையில் விழுமோ என்று திகில் ஏற்படுத்தற டெக்னிக்ல தொங்கிட்டு இருக்கிறது இதோட ஸ்பெஷல். அந்தக் கட்டடத்தைக் கவனமா கிராஸ் பண்ணிட்டு வந்தேன்.

சுற்றுலா, தீம் பார்க் என தலைகீழ் கட்டடங் களுக்குக் கிடைக்கிற மவுஸைப் பார்த்து மத்தவங்களும் களத்தில் இறங்கி கலக்கறாங்க. ஜப்பானில் உள்ள சகா சா (sணீளீணீ sணீ) என்ற ரெஸ்டாரன்ட், தலைகீழா பிங்க் நிறத்தில் பளிச் என பார்த்த உடனே சுண்டி இழுக்குது. சாலையில் வேற வேலையா வேகமா போறவங்ககூட, ஒரு காப்பி குடிச்சுட்டுப் போகலாம்னு வண்டியை நிறுத்திடறாங்க. வாசல் கதவு எதுன்னு கொஞ்சம் குழம்பும் அளவுக்கு இருக்கு இதோட அமைப்பு. அந்தக் குழப்பம்கூட ஒரு த்ரில்தான். அங்கே சூப்பரா ஒரு ஐஸ் காப்பி குடிச்சுட்டுக் கிளம்பினேன்.

தலைகீழா யோசிக்கறாங்க !

இது தவிர, தனி நபர்களின் தலைகீழ் வீடுகளும் தென்ஸ்  ஸ்ஸ்ஸ் கொரியா, துருக்கி என பல இடங்களில் இருக்கு. இதெல்லாம் வெளியே தலைகீழா இருந்தாலும் உள்ளே நார்மலா இருக்கும். ஆனா, ஜெர்மனியில் உள்ள ஒரு தலைகீழ் கட்டடத்தின் உள்ளே போனா நாற்காலி, சோபா, டாய்லெட் என எல்லாமே நம்ம தலைக்கு மேலேதான் இருக்கு. இது பொதுமக்கள் பார்க்க ஒரு எக்ஸிபிஷனா செயல்படுது.

இதை எல்லாம் பார்த்துட்டு திரும்பறப்ப, பூந்தமல்லி வழியே சென்னைக்கு வர்றேன்... 'அட! அங்கே தலைகீழா ஒரு கட்டடம்... ஓடிப்போய் விசாரிச்சேன். ''ஆமா ஜீபா... இங்கே ஒரு தீம் பார்க் வருது. கடைசிக் கட்ட வேலைகள் நடக்குது. எல்லாம் முடியட்டும். நம்ம சுட்டிகளோடு நீயும் வந்து கலக்கலாம்'' என்றார்கள்.

அப்புறம் என்ன சுட்டீஸ்... சீக்கிரமே அங்கே போய் கலக்கிடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு