பிரீமியம் ஸ்டோரி

கே.ஆர்.ராஜமாணிக்கம்

கொழு கொழு குழந்தையக் கண்டால் யாருக்குமே கொஞ்சும் ஆசை வரும். ஆனால், சீனாவில் உள்ள மூன்று வயது லூ ஹாவ்வைப் பார்த்தால் சற்று மிரளத்தான் செய்வீர்கள். காரணம், மூன்றே வயதில் 60 கிலோ எடை. அதாவது, சராசரி குழந்தை களைவிட 5 மடங்கு அதிகம். இவனது பெற்றோர், குவாங்டான் குழந்தைகள் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். ''தலையில் கட்டி இருக்கிறது'' என்று ஒரு டாக்டரும் ''அப்படி எல்லாம்  இல்லை'' என்று இன்னொரு டாக்டருமாக சொல்லிக் குழப்ப, ரொம்பவே பயந்துவிட்டார்கள்.

ஹாவ் லூஹா!

அதன் பிறகு, ஒரு டாக்டர் பெற்றோர்களுக்கு ஆறுதலாக ஒரு விஷயத்தைச் சொன்னார், ''இவன் உயரமாக வளர்வதற்கான டிரீட்மென்ட்டை நாங்கள் செய்கிறோம். சத்தான உணவை மட்டும் கொடுங்கள். நீங்கள் கொடுப்பதுபோல் அதிக அளவு உணவைக் கொடுக்காதீர்கள்'' என்றனர். ''பசியால்

ஹாவ் லூஹா!
##~##

அவன் அழும்போது,  எப்படி சும்மா இருக்க முடியும்?'' என்கிறார் லூ ஹாவ்வின் அம்மா. இப்போது,அவனை வாக்கிங் அழைத்துச் செல்வது, பிடித்த விளையாட்டை விளையாடச் செய்வது, ஆற்றில் நீந்தச் செய்வதுமான பயிற்சிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். வீட்டில் லூ விளையாட நிறைய பொம்மைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, 'சூப்பர் மேன்’ பொம்மை. காரணம்  ''சூப்பர்மேன்தான் கெட்ட மனிதர் களைப் பறந்து சென்று அடிப்பான்'' என்கிறான். ''நீயும் அதுபோல் அடிப்பாயா?'' என்றால், ''இல்லை, நான்தான் ரொம்ப குண்டாக இருக்கிறேனே'' என்கிறான் சிரித்துக் கொண்டே. சீனாவில் தற்போது 60 மில்லியன் மக்கள் பருமனாக இருக்கிறார்களாம். யார் என்ன சொன்னாலும், தங்கள் குழந்தை ஒரு நாள் ஒல்லி ஆகிவிடுவான் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் லூ ஹாவ்வின் பெற்றோர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு