Published:Updated:

பற...பற... கிளியே !

- சுட்டிகளுக்கு கோடை ட்ரீட்....

பிரீமியம் ஸ்டோரி

கே.யுவராஜன்

கோடை வந்தாலே சுட்டிகளின் குதூகலத்துக்குக் குறை இருக்காது. சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இருந்தாலும் அதை சட்டை செய்யாமல் தீம் பார்க், சினிமா, விளையாட்டு, பாட்டி வீட்டுக்கு படையெடுப்பு, புதிய விஷயங்களைக் கற்க பயிற்சி... என விடுமுறையை முழுமையாக அனுபவிப்பார்கள். அப்படி இந்த ஆண்டு நீங்கள் தேர்வுகளை முடித்து, விடு முறைக்குத் தயாராகும் நேரத்தில், 'ஹாய்... ஹலோ’ சொல்லியபடி உங்களை மகிழ்விக்க வரப் போகிறான்... 'ரியோ!’

பற...பற... கிளியே !

'

##~##

மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துக்கொடுக் கணுமா?’ என்பார்கள். அதாவது, திறமைசாலிகளின் வாரிசுகளும் அவரைப் போலவே இருந்தால் இப்படி சொல்வார்கள். அதையே மாற்றி யோசித்தால்... அதுதான் ரியோ! பறக்கப் பயப்படும் ஒரு பறவையின் கதை.

அட்டகாசமான அனிமேஷனில் உருவாகி உள்ள 3ஞி திரைப்படம், இந்த ஏப்ரலில் வருகிறது. ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இயக்குனர், கர்லோஸ் ஸால்டனா (சிணீக்ஷீறீஷீs sணீறீபீணீஸீலீணீ). ஐஸ் ஏஜ், ரோபோட்ஸ் போன்ற அனிமேஷன் வெற்றிப் படங்களை இயக்கி சுட்டிகளைக் கவர்ந்தவர்.

பற...பற... கிளியே !

கிளி இனங்களில் ஒன்றான 'மெகாவ்’ (விணீநீணீஷ்) கிளிகள் நீல நிறத்தில் இருக்கும். அத்தகைய கிளிகளில் ஒன்றுதான் கதையின் நாயகன். கதை நடப்பது... பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரை ஒட்டியுள்ள ஒரு மழைக் காட்டில். அங்கே ஒரு காலை நேரம், பறவைகள் எல்லாம் ஆடிப் பாடி மகிழ்கின்றன. அப்போது, உயரமான மரத்தின் கூட்டுக்குள் இருந்து மெள்ள எட்டிப் பார்க்கிறது ஒரு சுட்டிப் பறவை. பிறந்து சில நாட்களே ஆன அதுதான் ரியோ. தானும் பறக்க நினைத்து சற்று முன்னே வர, ஓ! கூட்டில் இருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. உடனே காப்பாற்றப் பட்டு, கூட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆனாலும் ரியோ ரொம்பவே பயந்துவிடுகிறது. அன்று முதல், 'தன்னால் பறக்க முடியாது’ என்ற எண்ணம் அதன் மனதில் பதிந்துவிடுகிறது. வளர்ந்த பிறகும், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறது.

ரியோவுக்கு ஒரு மரங்கொத்தி நண்பனாக இருக்கிறது. தவிர, ரியோவைப் போலவே மெகாவ் இன பெண் கிளி ஒன்று ரியோ மீது மிகவும் அன்போடு இருக்கிறது. இரண்டும் சேர்ந்து ரியோவுக்குத் தைரியம் சொல்கிறார்கள். ''உன்னால் பறக்க முடியும், உனக்கு நாங்கள் பறக்கக் கற்றுத் தருகிறோம்'' என்று சொல்லி, மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

பற...பற... கிளியே !

நீச்சல் பழக, நம் கிராமப் பகுதிகளில் கயிறு கட்டித் தண்ணீரில் இறக்குவார்களே... அப்படி ரியோவின் காலில் மெல்லிய சங்கிலியைக் கட்டி, அதன் மறுமுனையை பெண் கிளி தனது காலில் கட்டிக்கொள்கிறது. மரங்கொத்தி பறந்து காட்டி, ரியோவை அதுபோல் பறக்க உற்சாகப்படுத்துகிறது. அந்த நேரம், நகரின் கடற்கரையில்... மனிதர்கள் கிளைடர் விமானத்தில் பறக்கிறார்கள். அப்படி பறந்து வரும் ஒரு மனிதனைக் காட்டி, ''பறக்கும் சக்தி இல்லாத மனிதர்களே எப்படி பறக்கிறார்கள்... நீ றெக்கை உள்ள பறவை. பறக்காமல் இருக்கலாமா?'' என்கிறார்கள்.

ம்ஹூம்! அப்படியும் ரியோவின் பயம் போகவில்லை. ரியோவை இழுத்துக்கொண்டு மலை உச்சியில் இருந்து குதிக்கிறது பெண் கிளி. ரியோ அலற, ஒரு கிளைடர் மீது விழுந்து, அதில் தொங்கியபடி கடற்கரையில் வந்து விழுகின்றன ரெண்டும். பிறகு நடக்கும் கலாட்டாக்கள், ரியோவை பறக்க வைக்க மற்றவர்கள் செய்யும் முயற்சிகள் என, படம் முழுக்கவே நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை.

ஹீரோ இருந்தால் வில்லனும் இருப்பான் அல்லவா? இந்தப் படத்தின் வில்லன், ஒரு வெள்ளைக் கிளி. சுட்டிப் பறவைகளைக் கடத்தி, கூட்டில் அடைத்து அட்டகாசம் செய்யும். இதற்குமேல் கதை என்னவாக இருக்கும்னு நீங்களே கண்டுபிடிச்சு இருப்பீங்க. எஸ்! அந்த வில்லனுக்கும் ரியோவுக்கும் சண்டை நடக்கும். அதுல யாரு ஜெயிக்கறா..? ரியோவின் பறக்கும் பயம் எப்படி நீங்குது..? என்பதே மிச்சக் கதை.

அசத்தலான அனிமேஷன், பிரபலங் களின் பின்னணிக் குரல்கள், அற்புதமான இசை என பெரியவர்களின் படங்களுக்கு நிகராக... சிறப்பாக உருவாகி இருக்கிறது ரியோ. படத்தின் ஆரம்பக் காட்சியே அவ்வளவு அழகாக இருக்கும். பலவகைப் பறவைகள் ஆடிப் பாடியவாறு பூ, நீரூற்று, இதயம் போன்ற பல்வேறு வடிவங்களில் வானில் பறந்து, நடனமாடி, சாகஸம் செய்வது எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கும். வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், பயம், தாழ்வுமனப்பான்மையை விரட்டினால்... எதையும் சாதிக்கலாம் என்பதை அழகாக மனதில் பதிய வைக்கிறான் ரியோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு