Published:Updated:

மீட்டிங்...கார்ட்டூன் வி.ஐ.பி போக்கிமாள்...

மீட்டிங்...கார்ட்டூன் வி.ஐ.பி போக்கிமாள்...

பிரீமியம் ஸ்டோரி

 இரா.நடராசன்

 ஆஷ் கெட்சும்... போக்கிமான்களை போட்டிக்குப் பயிற்றுவிக்கும் சாகசச் சிறுவன்! அவன் தனது செல்ல பிக்காச்சுவுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

ஆஷ்: பிக்காச்சு... இனி எத்தனை போட்டிகள் வந்தாலும் நாம்தான் ஜெயிக்கணும்... ஓகே?

மீட்டிங்...கார்ட்டூன் வி.ஐ.பி போக்கிமாள்...

சங்கீதா: ஆஷ்... பிளீஸ் நில்லு!

##~##

ஆஷ்: வெயிட் பிக்காச்சு! சம்படி இஸ் காலிங்... யாரு?

சங்கீதா:ஆஷ்... என் பெயர் இரா.சு.சங்கீதா. நான், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லனா, எங்க சுட்டிகளுக்காக ஒரு பேட்டி கொடுக்க முடியுமா பிளீஸ்!

ஆஷ் : வாவ்... நல்ல ஐடியா! சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேண்டும்? வாங்க, நாம் நடந்துகிட்டே பேசலாம்.

சங்கீதா: ஆஷ்... போக்கிமான்னா என்ன? அந்தப் பெயர் எப்படி வந்தது?

ஆஷ்: 'பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ அதைச் சுருக்கமா போக்மான் என்று அழைக்க,  தமிழில் போக்கிமான்னு ஆயிடுச்சு.

மீட்டிங்...கார்ட்டூன் வி.ஐ.பி போக்கிமாள்...

சங்கீதா: பாக்கெட் மான்ஸ்டர்ஸ்! இப்போ புரியுது. உங்க பாக்கெட் பந்திலிருந்து வெளிவரும் உருவங்கள்... அவர்களுக்குள் நடக்கும் போட்டி, அதற்கு அவர்களைப் பயிற்றுவிப்பது உங்க வேலை. நீங்கதானே கோச்.

ஆஷ்: சரியா சொன்னே. இவன்தான் பிக்காச்சு! இவனும் ஒரு போக்கிமான்தான். இவனை நான் பயிற்சிக்கும் தேர்ந்தெடுத்தேன். உலகமெங்கும்  சுற்றிவந்து, நடக்கும் போட்டிகளில்  இவனை மோதவிட்டு வெல்வேன்.

சங்கீதா: உங்கள் நண்பர்கள் டான், மிஸ்டி...

ஆஷ்: ஓ... அவங்களையும் உனக்குத் தெரியுமா? ஆமாம், அவங்களும் பயிற்சியாளர்கள். அவங்ககிட்டேயும் மான்ஸ்டர்ஸ் இருக்கு. மிஸ்டி, தண்ணீர் கேம்களில் பயிற்சி தருவதில் அற்புதமான நிபுணத்துவம் உடையவள்.

சங்கீதா: பிக்காச்சு உங்களிடம் ஏன் வந்தது?

ஆஷ்: ஆரம்பத்தில் நான் பிக்காச்சுவை தேடிப்போகவில்லை... நான் உண்மையில் தேடிப்போனது புல்பாசார், சார்மான்டர் போன்ற வைகளைத்தான். ஆனால், நான் லேட்டாகப் போய் சேர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக பிக்காச்சு எனக்கு கிடைத்தது.

(தூரத்தில் மிஸ்டி வருகிறாள். அவளை ஆஷ் சுட்டிக்காட்டுகிறான்)

ஆஷ் : அதோ... மிஸ்டியும் வந்துவிட்டாள். மிஸ்டி, பத்திரிகைக்கு பேட்டி எடுக்க இவங்க வந்திருக்காங்க.

மிஸ்டி: ஹாய்!

சங்கீதா: உனக்கு ஆஷ் எப்படி நண்பன் ஆனான்னு சொல்ல முடியுமா?

மீட்டிங்...கார்ட்டூன் வி.ஐ.பி போக்கிமாள்...

மிஸ்டி: முதலில் ஆஷ் எனக்கு நண்பன் கிடையாது. என்னோட பைக்கை உடைச்சு அவன் அழிச்சான். அதனால, அவனைப் பின்தொடர்ந்தேன். பட், போகப்போக நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.

சங்கீதா: ஆஷ்... உங்களை உருவாக்கியது?

ஆஷ்: நாங்கள் உருவான நாடு ஜப்பான். 1997-ல் முதலில் எங்களை உருவாக்கியவர் மாசாமிட்சு ஹிடக்கா (Masamitsu Hidaka) எனும் அங்கிள், அவரோடு சேர்ந்து தகேஷி ஷூடோ (Takeshi Shudo) என்பவரும் எங்களை உருவாக்கினாங்க.

சங்கீதா: படமாக்கூட வந்திருக்கீங்க இல்லையா?

ஆஷ்: முதலில் ஜப்பானிய மொழியில் கார்ட்டூனாக... பிறகு, ஆங்கிலத்தில் கார்ட்டூன் நெட் வொர்க்கில் கிட்டத்தட்ட 600 எபிசோட்! வார்னர் பிரதர்ஸ் 1999-லிருந்து 2006-வரை டி.வி.டி., படங்களாகவும் எடுத்தனர். டோக்யோ டி.வி நெட்வொர்க்கில் இப்பவும் நான்தான் நம்பர் ஒன்!

மிஸ்டி: இதுவரை 14 திரைப்படம், ஐந்து சீரீஸ், நான்கு 3-டி படம் என எங்கள் சாதனை தொடருது.

சங்கீதா: சுட்டிகளுக்கான உங்கள் செய்தி என்ன?

ஆஷ்: நாம் விளையாட்டில் தீவிர பயிற்சி எடுக்கவேண்டும். படிப்பு போல விளையாட்டும் முக்கியம்.

மிஸ்டி: சிறந்த பயிற்சியாளர் ஆவதும் முக்கியம். நமது ஆசிரியரின் பயிற்றுவிப்பு நுணுக்கங்களை அறிந்தால், கல்வி இன்னும் சுலபமாகும் அல்லவா... அதுபோலத்தான்.

ஆஷ்: அதில் ஒரு த்ரில் இருக்கு. எதையும் விரும்பி ஆர்வத்தோடு செயல்பட வேண்டும்!

சங்கீதா: ரொம்ப தேங்க்ஸ்... உங்கள் போட்டிகளும் வெற்றிகளும் தொடர வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு