Published:Updated:

சிக்கு....புக்கு.குக்கு !

சிக்கு....புக்கு.குக்கு !

பிரீமியம் ஸ்டோரி
சிக்கு....புக்கு.குக்கு !

ஹாய் சுட்டீஸ்...  வெயிலைத் தணிக்க புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பழங்கள், தேன் மற்றும் குளிர்ச்சியை அளிக்கும் யோகர்ட் ஆகியவற்றின் பயன்களையும் அவற்றின் சிறப்புகளையும் விளக்குகிறார், டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. அவற்றைக் கொண்டு இரண்டு விதமான சூப்பர் ரெசிபிகளை செய்யச் சொல்லித் தருகிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். இவற்றை உங்க அம்மாகிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்களேன்..!

மிக்ஸ்டு ஃப்ரூட் பஞ்ச்!

சிக்கு....புக்கு.குக்கு !

தேவையானவை: வாழைப்பழம், சப்போட்டா, மாதுளை, கொய்யா, பப்பாளி ஆரஞ்சு, திராட்சைப் பழத் துண்டுகள்- 3 கப், முளை கட்டிய பயிறு - அரை கப், பேபி கார்ன் துண்டுகள்(லேசாக வேக வைக்கவும்) - அரை கப், பாதாம் துண்டுகள் - கால் கப், தேன் - இரண்டு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: மேலே  கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, குழந்தைகளுக்குக் கொடுக்கவும். ரொம்பவும் சத்துள்ள, குழந்தைகளுக்கேற்ற பரீட்சை நேர உணவு இது.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 688 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 105 கிராம்

ப்ரோட்டீன் - 23 கி

கொழுப்பு - 19 கி

கால்சியம் - 201 மில்லி கிராம்

இரும்பு - 6.8 மி.கி

பீட்டா கரோட்டின் - 1035 மைக்ரோ கி

வைட்டமின்-சி - 186.5 மி.கி

கொலின் - 84 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: பழங்களில் கார்போஹைட்ரேட் இருப்பதால், அவை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். இது விளையாட்டு வீரர்களாக உருவாகும் சுட்டிகளுக்கு ஏற்ற நல்ல உணவு. இதில் கிடைக்கும் வைட்டமின் 'சி’ யால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எலும்புகளுக்கு வலுவும், தோல்களுக்கு மென்மையும் தரவல்லவை. இதில் கலந்திருக்கும் பாதாம் பருப்பின் மூலம் கிடைக்கும் கொழுப்பானது... உடலுக்கு நன்மை அளிக்கும் கொழுப்பாகும். இது கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பை அளிக்கும். முளைகட்டிய பயிறைச் சாப்பிடுவதால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற உணவு இது.

ஃப்ரூட்டி யோகர்ட்!

சிக்கு....புக்கு.குக்கு !

தேவையானவை : வாழைப்பழம் - இரண்டு, கருப்பு(விதை இல்லாத) திராட்சை - இரண்டு கப், துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் - அரை கப்.

செய்முறை: கெட்டித்தயிருடன் (யோகர்ட் தேவை என்றால் கடையில் வாங்கிக் கொள்ளவும்) வாழைப்பழத்தைச் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். கண்ணாடிக் கிண்ணங்களில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள் சிறிதளவு தூவிப் பரிமாறவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 875 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 182 கிராம்

  ப்ரோட்டீன் - 15 கி

  கொழுப்பு - 10 கி

  கால்சியம் - 570 மில்லி கி

  இரும்பு - 2.8 மி.கி

  பீட்டா கரோட்டின் - 638 மைக்ரோ கி

  ஃபோலிக் ஆசிட் - 37.5 மை.கி

  வைட்டமின் சி - 128 மி.கி

டயட்டீஷியன் கமென்ட்:

யோகர்ட்டில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து தாது உப்புக்களும் கிடைக்கின்றன. வாழைப் பழம் மற்றும் திராட்சையில் இருந்து உடனடியாக ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்துக்கு நல்லது. மேலும், வயிற்றுப் புண்களை ஆற்றும். இது ஒரு சமச்சீர் உணவு. மதிய வேளைகளில் சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.

படங்கள்: து.மாரியப்பன்

உருளை உருண்டை!

 

தேவையானவை: வாழைக்காய் -1, உருளைக்கிழங்கு - 1, ரொட்டித்துண்டு -2, மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், கரம் மசாலா - 1 ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு, கோதுமைமாவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காய், உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸியில் ரொட்டித் துண்டுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து, கரம் மசாலா, உப்புக் கலந்து, உருண்டை பிடிக்கும் அளவுக்கு பொட்டுக்கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கவும்.

சாப்பாட்டுடனும், மாலைச் சிற்றுண்டியா கவும் சாப்பிடலாம்.

சிக்கு....புக்கு.குக்கு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு