Published:Updated:

நெத்தியடி பதில்கள் !

நெத்தியடி பதில்கள் !

பிரீமியம் ஸ்டோரி
நெத்தியடி பதில்கள் !

வினோபா பாவேவை நான்கைந்து செய்தியாளர்கள் பேட்டி காணப் போனார்கள். வினோபாஜி அவர் களிடம், ''நீங்கள் எந்த மொழியில் பேட்டி காணப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். ஏனெனில், வினோபாஜிக்கு பல மொழிகள் சரளமாகத் தெரியும்.

''உங்களுக்கு எந்த மொழியில் பதில் சொல்ல விருப்பம்?'' என்றார் ஒரு செய்தியாளர்.

''எனக்குப் பிடித்த மொழி மௌனம்'' - என்றபடியே வினோபாஜி அறைக்குள் போய்விட்டார்.

நெத்தியடி பதில்கள் !

ஒரு தடவை, சர்ச்சில் கடைத் தெருவில் நடந்துகொண்டிருந்தார். அங்கே, ஒரு கடையில் அவரது படங்கள் நிறையத் தொங்கிக்கொண்டு இருந்தன. சர்ச்சிலுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆவலுடன் கடைக்காரரிடம், ''என்னுடைய படங்களை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளாய். மற்றவர்களின் படங்களையும் விற்பதுதானே'' என்று கேட்டார்.

கடைக்காரர், ''மற்றவர்களின் படங்கள் எல்லாம் விற்று விட்டன'' என்று அமைதியாகக் கூறினார். சர்ச்சிலுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. சற்றுமுன் இருந்த மகிழ்ச்சி மாறி, வெட்கமாகிப்போனது.

நெத்தியடி பதில்கள் !

புகழ் பெற்ற மெய்யியல் அறிஞரான ஹோபனேரின் நூலில் சிலவற்றை ஒரு பதிப்பகத் தார் வெளியிட்ட னர். அதற்கு பதிப் பகத்தார், கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந் தனர்.

ஹோபனேர் அதற்கு நன்றி தெரிவித்ததோடு, 'தாங்கள் அன்பளிப்பாய் கொடுத்த கடிகாரம் ஓடமாட்டேன் என்கிறது’ என்றும் எழுதியிருந்தார்.

பதிப்பகத்தாரின் பதில்: உங்கள் புத்தகமும்தான்!

நெத்தியடி பதில்கள் !

ஒரு பெண், தான் வளர்க்கும் நாய்க் குட்டிக்கு அறிஞர் பெர்னாட்ஷா வின் பெயரை வைக்க விரும்பி, அவரிடம் இசைவு கேட்டுக் கடிதம் எழுதினாள். அதற்கு பெர்னாட்ஷா எழுதிய பதில் என்ன தெரியுமா?

'பெண்ணே! அப்படி பெயர் வைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், உன் நாய்க் குட்டிக்கு ஏதேனும் மறுப்புண்டா என்று எதற்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்’ என்று எழுதி இருந்தார்.

நெத்தியடி பதில்கள் !
நெத்தியடி பதில்கள் !

காற்றும்...மலையும் !

ஒருநாள், மலைக்கும் காற்றுக்கும் தங்களில் யார் சிறந்தவர் என்று போட்டி ஏற்பட்டது. ''உயரத்துக்கு உதாரணம் சொல்கிற யாரும் என்னைத்தான் குறிப்பிடுவார்கள். நானே உயர்ந்தவன், நானே சிறந்தவன்'' என்றது.

நெத்தியடி பதில்கள் !

 அதற்கு காற்று, ''உயரமாக இருப்பதாலேயே நீ சிறந்தவன் ஆக மாட்டாய். நீ ஒரே இடத்தில்  இருப்பவன். நான் உலகையே சுற்றி வருபவன். தென்றலாக மகிழ்விப்பேன். புயலாக பயமுறுத்துவேன். அதனால் நானே சிறந்தவன்'' என்றது.

அப்போது சூரியன் உதயமானான். காற்றும் மலையும் சூரியனிடமே தங்களில் சிறந்தவர் யார் என்று கேட்டன.

அதற்கு சூரியன், ''உலகில் உள்ள எல்லோருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கிறது. அவரவர் கடமையை சரியாகச் செய்யும் எல்லோருமே சிறந்தவர்தான். இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை'' என்றது. காற்றும் மலையும் வாயடைத்து நின்றன.      

நீரும் நெருப்பும் !

நெத்தியடி பதில்கள் !

ஒருநாள், 'தகதக’ என எரிந்துகொண்டிருந்த நெருப்பு, தனக்கு அருகே இருந்த நீரைப் பார்த்து, ''இந்த உலகில் என்னைவிட சிவப்பானவர்கள் யாரும் இல்லை. நானே அழகானவன். உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. பாவம்... உனக்கு என்று எந்த நிறமும் இல்லை!'' என்று சொல்லி கேலியாகச் சிரித்தது.

அதற்கு நீர், ''நான் நிறமற்றவன்தான்...ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒன்று, நான் நினைத்தால் உன் மீது பாய்ந்து அடுத்த நொடியே உன்னை  கருப்பாக்கிவிடுவேன். வீண் வம்பு வேண்டாம் என்று பார்க்கிறேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் இருவருக்குமே நல்லது. சண்டை போட்டால் இருவருக்குமே ஆபத்து. எப்படி வசதி?'' என்று கேட்டது.

அவ்வளவுதான்... நெருப்பு வாயை மூடிக் கொண்டது!

நெத்தியடி பதில்கள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு