Published:Updated:

பல்லேலக்கா ஃப்ரெட்டி !

பல்லேலக்கா ஃப்ரெட்டி !

பிரீமியம் ஸ்டோரி

'நேராக கட்டியிருக்கும் கயிற்றின் மீது எல்லோரும்தான் நடக்கிறார்களே... அதில் என்ன 'த்ரில்’ இருக்கு’ என்கிறார் சுவிட்சர்லாந்தின் 'எட் ஃப்ரெட்டி நோக்’. இவர், சர்க்கஸ் கம்பெனியில் சாகஸம் காட்டுபவராக இருக்கிறார். தொய்வாகக் கட்டி இருக்கும் கயிற்றின் மீது கடகடவென நடந்து கடப்பதில் கில்லி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில், மலைப் பகுதியில் அமைந்துள்ள, 'கேபிள் கார்’ ஒயர் மீது நடந்து, உலக சாதனை படைத்துள்ளார், 45 வயதாகும் ஃப்ரெட்டி.

பல்லேலக்கா ஃப்ரெட்டி !
##~##

இந்தக் கேபிள் கார் அமைந்துள்ள மலையின் உயரம்... 10,836 அடி. ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு இந்தக் கேபிள் மீதே நடந்து சென்றிருக்கிறார். இது ஏற்றத் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் கேபிள் என்பதை நினைவில் கொள்ளவும்! அதுவும், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லா மலேயே இந்த சாகஸத்தைச் செய்திருக்கிறார். 5,549 அடி உயரத்தில் தொடங்கி, கடல் மட்டத்தில் இருந்து 8,865 அடி உயரத்தில் அமைந்துள்ள அடுத்த கேபிள் கார் ஸ்டேஷன் வரை... கையில் ஒரு கழியை வைத்துக்கொண்டு, ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் கேபிள் மீது 1600 மீட்டர் நடந்தே கடந்தார் என்றால், அது சாதனைக்கு உரிய விஷயம்தானே!

'துணிவு இருந்தால் எத்தனை உயரமும் தொடும் தூரம்தான்’ என்பது, இவர் நமக்கு சொல்லும் பாடம்.

என்.மல்லிகார்ஜுனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு