Published:Updated:

கராத்தேவில் ஒரு தங்கமகன் !

டி.பி.ஜி.சாமுவேல் டேவிட் டில்டன் பா.காளிமுத்து

கராத்தேவில் ஒரு தங்கமகன் !
##~##

''மதுரையில் இருக்கும் ஒரு பூங்காவுக்குப் போகணும்னாலே அப்பாகிட்டே அடம் பிடிச்சு, சண்டை போட்டாதான் போக முடியும். ஆனா இப்போ, மலேசியாவுக்குப் போகப்போறேன். இதுவும் சண்டை போட்டதாலதான் கராத்தே சண்டை'' என்று சொல்லிச் சிரிக்கிறார் சபரிஷ்.

மதுரை, ரூபி மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சபரிஷ், குட்டி கராத்தே சாம்பியன். சக தோழன் ஒருவன் கராத்தேயில் பரிசு பெற்றதைப் பார்த்து, அவனுக்கு தற்காப்புக் கலை மீது ஆர்வம் உண்டானது. முதன்முதலில் மதுரையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றான்.

''இவனது வேகத்தையும் ஆர்வத்தையும் பார்த்த கராத்தே மாஸ்டர் சுரேஷ், 'இவன் இன்னும் நல்லா வருவான். அதனால், பாதியில் தொடர்ந்து அனுப்புங்க. நான் இவனுக்கு இலவசமாகவே சொல்லித் தர்றேன்’னு சொல்லிட்டார்'' என்று பெருமையுடன் சொல்கிறார்கள் சபரிஷின் பெற்றோர்.

கராத்தேவில் ஒரு தங்கமகன் !

மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கிடுகிடுவென குவித்துவிட்ட சபரிஷ், சர்வதேச அளவில் மலேசியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்.

''நம்மோடு போட்டி போடுறவங்களும் திறமையானவங்கதான் என்கிற எண்ணம் மனசுல இருக்கணும். அவங்களை சாதாரணமா நினைச்சுடக் கூடாது. அதே நேரம், அவங்க யாரா இருந்தாலும் பயப்படக் கூடாது. ஏன்னா, நம்ம திறமையை அதைவிட 100 மடங்கு பெருசா மதிக்கணும். அப்போ, எந்தப் போட்டியிலும் ஈஸியா ஜெயிச்சுடலாம்'' என்று சொல்லி சிரிக்கிறார் சபரிஷ்.

மலேசியாவுக்குச் சென்று, தங்கத்துடன் திரும்பி வா சபரிஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு