Published:Updated:

ஒரு வீடு...இரண்டு சாதனையாளர்கள் !

செ.சிவபாலன் செ.வெங்கடகிருஷ்ணன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரு வீட்ல அண்ணன் - தங்கை இருந்தால், சாப்பாட்டில் தொடங்கி பேனா, பென்சில் எனப் பல விஷயங்களில் சண்டை போட்டுப்பாங்க. அவங்களை சமாதானம் செய்றதே பெரிய வேலையா இருக்கும். ஆனால், மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரசன்னாவுக்கும் அபர்ணாவுக்குமான 'நீயா நானா?’ போட்டியே வேறு. இரண்டு பேருமாகச் சேர்ந்து ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தையில் தேசிய அளவில் பல பதக்கங்களைக் குவிச்சுட்டு இருக்காங்க.

இவர்கள் மயிலாடுதுறை ரோட்டரி க்ளப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படிக்கிறார்கள்.

''நாங்க அன்பான அண்ணன்-தங்கைதான். ஆனா, போட்டியில் இறங்கிட்டா விட்டுக்கொடுக்க மாட்டோம். 'இன்னைக்கு நீ ரெண்டு வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சியா... நாளைக்கு நான் ரெண்டு தங்கப் பதக்கத்தோடு வர்றேன்’னு சவால் விட்டுப்போம்'' என்கிறார் பிரசன்னா.

ஒரு வீடு...இரண்டு சாதனையாளர்கள் !

மாவட்ட அளவில் தொடங்கிய இவர்களது பதக்க வேட்டை, மாநில, தேசிய அளவில் என்று வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவரை நான்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரசன்னா, மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் ரோலர் ஸ்கேட்டிங்கில் 21 பதக்கங்களும் வில்வித்தையில்  ஏழு பதக்கங்களும் அடங்கும். அண்ணனுக்குப் போட்டியாக தங்கை அபர்ணா, ரோலர் ஸ்கேட்டிங்கில் 19, வில்வித்தையில் 11 என 30 பதக்கங்களை வென்றுள்ளார்.

''ஸ்கேட்டிங், வில்வித்தை தவிர எனக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டு, பேட்மின்டன். சாய்னா நேவால் மாதிரி உலக அளவில் பேர் வாங்கணும்'' என்கிறார் அபர்ணா.

ஒரு வீடு...இரண்டு சாதனையாளர்கள் !

''சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, வரும் டிசம்பர் மாதம் ருமேனியாவிலும் நாக்பூரிலும் நடக்கப்போகுது, அதுக்குத் தயாராகிறோம்'' என்கிறார்கள் பிரசன்னாவும் அபர்ணாவும்.

பதக்கங்களோடு திரும்பி வாங்க ஃப்ரெண்ட்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு