Published:Updated:

இணையத்தில் மதிப்பீடு !

இணையத்தில் மதிப்பீடு !

பிரீமியம் ஸ்டோரி
##~##

கல்வியைக் கற்கண்டாக மாணவர்கள் கற்பதற்கு, கல்வித் திட்டத்தில் முப்பருவ முறை, புதிய பாடநூல்கள், தொடர் மதிப்பீட்டு முறை என, அரசு பல மாற்றங்களைச் செய்திருக்கிறது.

 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CCE முறை, மாணவர்களை 1, 2, 3 என்று வரிசைப்படி அடுக்குவதிலிருந்து விலக்கியிருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தனிக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு தரநிலையை அளிக்க வேண்டும். இதனால் அதிகரித்துள்ள ஆசிரியர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் way2cce.com

இந்தத் தளத்தின் உள்ளே நுழைவதும் கையாளுவதும் எளிது. கணினி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்தத் தளத்தில் மதிப்பெண்களைப் பதிவுசெய்யும் பிரிவு, தரம் அளிக்கும் பிரிவு, ஒப்பிட்டு ஆராயும் பிரிவு என மூன்று பிரிவுகள் உள்ளன.

இணையத்தில் மதிப்பீடு !

இதை, ஒவ்வொரு பள்ளியும் தம் பெயரில் மின்னஞ்சல் போல ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். அதே பதிவைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பயன்படுத்தலாம். முதல் பிரிவில் உள்ள வகுப்புகளுக்குள் மாணவர் பெயரை ஒருமுறை, ஒரு பாடத்துக்குப் பதிவுசெய்தால் போதும். அடுத்தடுத்த பாடங்களுக்கு குறிப்பிட்ட வகுப்பைச் சொடுக்கியவுடன், அந்த வகுப்பைச் சார்ந்த மாணவர்களின் பெயர்ப் பட்டியல் திரையில் வந்து நிற்கும்.

குறிப்பிட்ட பாட ஆசிரியர், தம் பாடத்துக்குரிய மதிப்பெண்களை மட்டும் அதில் பதிவுசெய்துகொள்ளலாம். ஒரு மதிப்பெண்ணைப் பதிவுசெய்தவுடன், அடுத்தடுத்த கட்டங்களில் பதிவு செய்வதற்கேற்ப cursor நகர்ந்து நிற்கும்.

ஒரு பாடத்துக்குரிய நான்கு வளரறித் தேர்வு மதிப்பெண் களைப் பதிவுசெய்யும்போதே, இரண்டு அதிகத் தரங்கள் தாமாகப் பிரிக்கப்பட்டு, அதற்குரிய மொத்த மதிப்பெண் எண்ணிக்கையும் தரநிலையும் அளிக்கப்பட்டுவிடுகின்றன. இவ்வாறு மதிப்பிடுதல், சிறப்பாகவும் எளிதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் மதிப்பீடு !

மூன்று பருவங்களுக்கும் மதிப்பெண்களைப் பதிவுசெய்த திரள் பதிவேட்டை PDFஆகப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு ஏற்ற வகையில் way2cce.com அமைந்துள்ளது. இதனால், மதிப்பெண்களைக் கையால் எழுதி, பதிவேடுகளைப் பராமரிக்கும் பணிப்பளு முழுவதும் குறையும்.

தமிழகத்துக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இணையதளம், முற்றிலும் இலவசம்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு