Published:Updated:

நாங்களும் சமைப்போம் !

கூட்டிகளின் அறுசுவை அசத்தல்செ.கிஸோர் பிரசாத் கிரண் ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நாம சமையலறையை எட்டிப் பார்த்தாலே,  'ஹேய்... ஹேய்... இங்கே உனக்கு என்ன வேலை? எதையாவது மேலே கொட்டிக்கப்போறே... வெளியே போ'' என அம்மாக்கள் விரட்டுவாங்க. ''சப்பாத்தி மாவை உருண்டை பண்றேனே...’ என்று கெஞ்சினாலும் மறுத்து, வெளியே துரத்திவிடுவார்கள்.

இதுதான் நம் வீட்டில் நடக்கும் விஷயம். ஆனால், 'நீங்க கே.ஜி. படிக்கிற சுட்டியாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் சமைக்கலாம் வாங்க’ என்று அழைத்துப் போட்டிவைத்தால், எவ்வளவு குஷியாக இருக்கும்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. மஹாலில் ளிறிளிஷி (ளிஸீமீ றிஷீt, ளிஸீமீ ஷிலீஷீt) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 5 முதல் 10 வயதான நண்பர்கள், ஆறு வகையான சமையல்களைச் செய்ய, அதை சுமார் 200 பேர் சுவைத்தார்கள்.

என்ன சமையல்... அதை எப்படி செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு, களத்தில் இறக்கினார்கள். உதவிக்கு சுட்டிகளின் அம்மாக்களும் நின்றிருந்தார்கள். முதல் ஐட்டம் அவல் பாயசம்.

நாங்களும் சமைப்போம் !

கைநிறைய அவலை ஒரு குக்கரில் போட்டுக்கொண்டு, அதில் இரண்டு டம்ளர் பாலையும் ஒரு ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்தனர். பின்பு, அந்த பிரஷர் குக்கரை தங்கள் அம்மாவிடம் கொடுத்து அடுப்பில் வைத்தனர். இரண்டு விசில் வந்ததும் எடுத்துத் திறந்தனர். அவல் பாயசம் ரெடி.

அந்த அவல் பாயசம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு ரவுண்ட் வந்தது. எல்லோரும் சுவைத்துப் பார்த்தார்கள். ''ஹேய்... அம்மாவை மிஞ்சிட்டே'' என்று ஒரு சுட்டிக்கு ஜாலியாக சர்ட்டிஃபிகேட் கொடுத்தார் அப்பா.

தான் செய்த பாயசத்துடன் வலம்வந்த அம்ரிதா, ''நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். இதுதான் நான் செய்த முதல் சமையல். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. இனிமேல் நானும் அம்மாவோடு சேர்ந்து சமைப்பேன்'' என்று துள்ளலுடன் சொன்னாள்.

நாங்களும் சமைப்போம் !

இனிப்பான பால்பாயசத்தில் ஆரம்பித்தவர்கள் அடுத்து, பருப்பு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என அசத்தினார்கள். ஒவ்வோர் ஐட்டத்தையும் சரியாக 20 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும் என்பதுதான் போட்டியின் முக்கியமான கண்டிஷன். ஆனாலும், டென்ஷனே

நாங்களும் சமைப்போம் !

இல்லாமல், செம ஜாலியாக செய்துகாட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

ரசத்தைச் செய்த மகிழ்ச்சியில் அதை அம்மாவுக்கு ஸ்பூனால் ஊட்டிய மூன்றாம் வகுப்பு படிக்கும் முபீத், ''எப்பவுமே அம்மாதான் வீட்ல சமைப்பாங்க. அதனால், கேர்ல்ஸ்தான் சமைக்கணும், பாய்ஸ் சமைக்கக் கூடாதுனு நினைச்சேன். ஆனா, எல்லோரும் சமைக்கலாம்னு இங்கே இருக்கிற அங்கிள் சொன்னார்'' என்றான்.

இந்த நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் தாமரைச்செல்வன், ''வீட்டுச் சமையல் என்றாலே, நம் நாட்டில் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து இருக்கிறது. சமைப்பது, கடினமான வேலை கிடையாது. அக்கறையுடனும் பாதுகாப்புடனும் செய்தால், எந்த உணவையும் யாராக இருந்தாலும் 20 நிமிடங்களில் ருசியாகச் செய்யலாம் என்பதை நிரூபிக்கவே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். சொல்லப்போனால், சமையல் என்பது வேலை கிடையாது. ஓவியம் வரைவது, விளையாடுவது போல அதுவும் ஒரு கலை. அந்த அற்புதமான கலையை அம்மா, அப்பா, குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து செய்யும்போது, அந்த இடத்தில் அன்பும் நெருக்கமும் அதிகமாகும்'' என்றார்.

கம்ப்யூட்டர் கேம்ஸ், டி.வி., என்று இருப்பதைவிட, சமையல் போன்ற சிறப்பான கலையில் அம்மாவுக்கு நாமும் உதவியாக இருப்போமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு