Published:Updated:

செய்திகள் வாசிப்பது சூப்பர் தளங்கள் !

நெட்டிஸம்சைபர்சிம்மன் ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பள்ளிப் படிப்புடன் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இந்த வயதிலேயே அதற்கு அப்படி என்ன அவசியம்?

நீங்கள் உயர் படிப்புக்கான போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, இது நிச்சயம் கைகொடுக்கும். நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் படிக்க வேண்டும். இந்த இணைய யுகத்தில், செய்திகளை இணையதளங்கள் மூலமே படித்துவிடும் வ‌சதியும் இருக்கிறது. மேலும், சிறுவர்களுக்கு என்றே செய்தித்தளங்கள் இருக்கின்றன. நமக்கு ஏற்ற வகையில் செய்திகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் த‌ரும் செய்தித்தளங்களைப் பார்க்கலாம்.

நாம் முதலில் பார்க்கப்போகும் செய்தித்தளம், ஹியர் தேர் எவ்ரிவேர்.காம் (http://www.kidsnewsroom.org/). என்பதாகும்.  சிறுவர் - சிறுமிகளைக் கவரும் வகையில் வண்ணமயமாக இருக்கும் இந்தத் தளத்தின் வடிவமைப்பும் எளிதாகவே இருக்கிறது.

உலகம், வானிலை, விண்வெளி, நாடு எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகளைத் தரும் இந்தத் தளம், செய்திகளை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் தருகிறது. நீங்கள் உலகுடன் எப்படித் தொடர்புகொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதும், மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்வதுமே தனது நோக்கம் என விவரிக்கும் இந்தத் தளம், அதன் மூலம் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அத்துடன், செய்திகளும் கதை போலதான். ஆனால், அவற்றில் வ‌ருவது எல்லாம் உண்மைச் சம்பவங்கள் என்று சொல்லி, உற்சாகம்கொள்ள வைக்கிறது. அதற்கேற்ப, செய்திகளை கதை போன்ற நடையில் தருகிறது.

செய்திகள் வாசிப்பது சூப்பர் தளங்கள் !

அடுத்த தளம், கிட்ஸ் நியூஸ் ரூம் (http://www.kidsnewsroom.org/).. இதுவும் சிறுவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதில் வாராந்திரச் செய்திகள், உலகச் செய்திகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். சிறுவர்களுக்கான தகவல் பகுதியும் இருக்கிறது. இதேபோல மற்றொரு பயனுள்ள தளம் டைம் ஃபார் கிட்ஸ். உலக அளவில் புகழ்பெற்ற செய்திப் பத்திரிகையான, 'டைம்’ இதழின் சிறுவர் பதிப்பு இது.

இவை எல்லாமே சூப்பரான செய்தித்தளங்கள் என்றாலும், பெரும்பாலும் அமெரிக்காவை மையமாகக்கொண்டவை. நம் நாட்டுச் செய்திகள் தேவையென்றால், சிறுவர்களுக்கான இணையதளமான பிட்டாரா.காமின் (http://www.pitara.com)சிறுவர் பகுதியை நாடலாம்.

10 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமிகளுக்கான செய்திகளை, இந்தியச் செய்திகள், அறிவியல் செய்திகள், சுற்றுச்சூழல் செய்திகள் மற்றும் உலகச் செய்திகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சுவையாக அளிக்கிறது இந்த இணையதளம். போனஸாக விளையாட்டுகள், செயல்முறைப் பகுதிகளும் உள்ளன. சிறுவர், சிறுமிகளுக்கான பத்திரிகையும் இந்தத் தளத்திலேயே இருக்கிற‌து.

செய்திகள் வாசிப்பது சூப்பர் தளங்கள் !

இதேபோல புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிரஃ‌பிக் பத்திரிகையின் இணையதளத்திலும் சிறுவர் பகுதி உண்டு. இங்கே உலகம் மற்றும் அறிவியல் செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, இந்தியா தொடர்பான தகவ‌ல்களையும் பார்க்கலாம்.

இவை தவிர, 'குட் நியூஸ் இண்டியா’ என்ற தளம் ஊக்கமளிக்கும் நல்ல செய்திகளை மட்டும் அளிக்கிறது.

கினூஸி (http://kinooze.com/category/top-news-for-kids/) 160; என்ற தளமும் சிறார்களுக்கான செய்திப் பகுதியை அளிக்கிறது. சிறுவர்களுக்கான தகவல்கள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பற்றி  இந்தத் தளத்தில் அறியலாம்.

செய்திகள் வாசிப்பது சூப்பர் தளங்கள் !

அறிவியல் சார்ந்த செய்திகளில் அதிக ஆர்வம் இருந்தால், அதற்காகவே இருக்கிறது, 'சயின்ஸ் நியூஸ் ஃபார் கிட்ஸ்’ என்ற தளம். அணுக்கள் தொடங்கி தொழில்நுட்பம் வரை பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானத் தகவல்களை, இங்கே படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தளங்கள் எல்லாம் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள உதவுவதோடு, உங்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தையும் உண்டாக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு