பிரீமியம் ஸ்டோரி

தண்மதி திருவேங்கடம்
கே.குணசீலன்
தமிழ்

##~##

சேமித்த பணத்தை உண்டியலில் வைத்திருக்காமல் வங்கியில் போட்டுவைத்தால், வட்டி மட்டுமல்ல... கூட்டு வட்டியும் கிடைக்கும்.

அதென்ன கூட்டு வட்டி?  

வட்டியை, Simple Interest’ என்றும் கூட்டு வட்டியை, ‘Compound Interest’ என்றும் சொல்வார்கள். இதை ஓர் எளிய உதாரணம் மூலம் காண்போம்.

துளித் துளியாய்

100-க்கு, வருடத்துக்கு 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், அது 100 * 10% =10ஆகும். ஒவ்வொரு வருடமும்

துளித் துளியாய்

10 தான் கிடைக்கும்.  ஆனால், கூட்டு வட்டிமுறையில் வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டு வருடங்கள் அதிகரிக்கும்போது அந்தக் கூடுதல் தொகைக்கு வட்டி கிடைக்கும். (பார்க்க

துளித் துளியாய்

அட்டவணை-1)

சரி, கொஞ்சம் பணம் கூடுதலாகக் கிடைக்கிறது அவ்வளவுதானே! இந்த ஃபார்முலாவில் ஏற்கெனவே பள்ளியில் நிறையக் கணக்குப் போட்டிருக்கிறோமே என்கிறீர்களா?

இது சாதாரண ஃபார்முலா இல்லை.  நோபல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை, 'இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சக்தி, உலகின் எட்டாவது அதிசயம்’ என்று சொல்லியிருக்கிறார்.

கூட்டு வட்டியில் முக்கியமான விஷயமே காலம்தான்.  காலம் அதிகரிக்க அதிகரிக்க,‌ கூட்டு வட்டியால் கிடைக்கும் லாபம் பன்மடங்கு பெருகும்.  முதலில் சொன்ன 100 ரூபாய், வருடங்கள் அதிகமாக அதிகமாக மாறும் விதம் பெரியது. (பார்க்க அட்டவணை-2)

இப்போது உங்களுக்கு 13 வயது ஆகின்றது என்றால், நீங்கள் வங்கியில் போட்டுவைத்த வெறும்

துளித் துளியாய்

100 நீங்கள் ரிட்டையர் ஆகும் காலத்தில்

துளித் துளியாய்

11,739 ஆகப் பெருகியிருக்கும். இதற்கு நீங்கள் தனியாக  மெனக்கெட வேண்டாம். பணத்தை வங்கியில் போட்டுவைத்தாலே போதும்.

இதைத்தான் 'வட்டி... குட்டி போட்டு பெரிய தொகை ஆவது’ என்பார்கள். அப்படியானால், கூட்டு வட்டியைச் சரியாகப் பயன்படுத்த  செய்யவேண்டியது என்ன?

துளித் துளியாய்
துளித் துளியாய்

சின்ன வயதிலேயே பணம் சேமித்து வங்கியில் போட வேண்டும். சுமார் 10, 15 வருடங்கள் தாண்டிய பின்னால், கூட்டு வட்டித் தொகை இரட்டிப்பாகப் பெருகுவதுடன், நம் மகிழ்ச்சியும் பெருகும்.

(சேமிப்போம்)

 கூட்டு வட்டியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு குட்டிக் கதை.

பாரசீக மன்னருக்கு, மிக அழகிய வேலைப்பாடுகொண்ட சதுரங்கத்தை அன்புப் பரிசாகக் கொடுத்தான் ஒருவன். அதைக் கண்டு  மகிழ்ந்த மன்னர், 'உனக்கு என்ன வெகுமதி வேண்டும்?' என்று கேட்டார்.

அதற்கு அவன் மிகவும் பணிவாக, 'எனக்கு இந்த முதல் செஸ் கட்டத்தில் ஒரு நெல்மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல்மணி, மூன்றாவது கட்டத்தில் நான்கு நெல்மணி என்று  அடுத்தடுத்த கட்டங்களில் இரட்டிப்பாக கொடுங்கள் போதும்'' என்றான்.

துளித் துளியாய்

'அப்படியே ஆகட்டும்'' என்றார் மன்னர் மிகச் சாதாரணமாக. ஆனால், பாதி சதுரங்க கட்டங்களிலேயே நெல்மணிகளுக்குப் பற்றாக்குறை வந்துவிட்டது.

நீங்களே பாருங்கள்... 1 + 2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 + 256 + 512 + 1024  என்று வளர்ந்து கட்டம் தாண்டும்போது,  4,294,967,295 நெல்மணிகள். அதாவது,  100,000 கிலோ நெல் (ஒரு நெல் மணி = 25 மில்லி கிராம்) ஆனது.  

நாட்டில் உள்ள மொத்த நெல்லைக் கொடுத்தும் அவன் கணக்கை தீர்க்க முடியவில்லை.

கூட்டு வட்டியின் சக்தி இதுதான்.  ஆரம்பத்தில் சிறியது போலத் தோன்றினாலும் காலம் போகப்போக மிகப்பெரிய தொகை கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு