பிரீமியம் ஸ்டோரி
##~##

ஸ்டீவ் இர்வின்...

நீங்கள் ஜூனியர் சுட்டிகளாக இருந்தால், இந்தப் பெயரை சீனியர் சுட்டிகளிடம் சொல்லிப்பாருங்கள். 'முதலை வேட்டைக்காரர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த ஆஸ்திரேலியரின் சாகசத்தைப் பற்றி கண்கள் விரியச் சொல்வார்கள்.

ஸ்டீவ் இர்வினின் தாய் மற்றும் தந்தையும் முதலை விளையாட்டில் சாகசக்காரர்கள்தான். தனது எட்டாவது வயதிலேயே முதலை சாகசத்தில் ஈடுபட்டவர் ஸ்டீவ். ஆஸ்திரேலியாவில் வனவிலங்குகள் காட்சிசாலை ஒன்றை நடத்திவந்தவர். முதலைகளுடன் இவர் செய்யும் சாகச விளையாட்டுகள் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம். அதன் தொடர்ச்சியாக, ஆபத்தான பல்வேறு உயிரினங்களை நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அப்படித் தண்ணீரில் உள்ள ஆபத்தான உயிரினங்கள் பற்றிய நிகழ்ச்சியில் ஸ்டீவ் ஈடுபட்டபோது, 'திருக்கை மீன்’ (Stingray) என்னும் விஷ மீனால் தாக்கப்பட்டு, செப்டம்பர் 6, 2006-ல் மரணம் அடைந்தார்.

விலங்குகளுடன் நடத்தும் வீர சாகசம், ஸ்டீவ் இர்வினின் குடும்ப ரத்தத்தில் கலந்தது. இப்போது, அவரது மனைவியும் தனது இரண்டு குழந்தைகளுடன் சாகசக் களத்தில் இறங்கிவிட்டார்.

ஸ்டீவ் இர்வினின் மனைவி டெர்ரி இர்வின். 14 வயது மகள் பின்டி இர்வின் மற்றும் ஒன்பது வயது மகன் ராபர்ட் இர்வின். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தனித்தனியாகவும் இணைந்தும் நடத்தி இருக்கிறார்கள். பின்டியும் ராபர்ட்டும் 'கிட்ஸ் சாய்ஸ்’ விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியவர்கள். இவர்கள் மூன்று பேரும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி, 'ஸ்டீவ் இர்வின்ஸ் வைல்ட்லைஃப் வாரியர்ஸ்’ (STEVE IRWIN’S WILDLIFE WARRIORS).

அன்பைச் சொல்லும்  சாகசப் பயணம்!

இந்தத் தொடர், 'அனிமல் பிளானெட்’ சேனலில் செப்டம்பர் 16 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 26 அத்தியாயங்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்...  அன்பு. ஆம், காட்டு உயிர்களிடம் அன்பு செலுத்திப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அதனால் காக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு உணர்வையும் இந்தத் தொடர் ஏற்படுத்துகிறது.

300 கிலோ எடையுள்ள 80 வயது முதலைத் தாத்தாவுக்கு காலில் புண். அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள். காரில் அடிபட்ட கோலா கரடியின் உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். கங்காருவைப் போன்று இருக்கும் 'வல்லபி’ என்ற அடிபட்ட விலங்கை, மருத்துவமனைக்குத் தூக்கி வருகிறார்கள். மீன்பிடித் தூண்டிலில் சிக்கித் தவிக்கும் வாத்து ஒன்றை மீட்கிறார்கள்.

அன்பைச் சொல்லும்  சாகசப் பயணம்!

இப்படி ஒவ்வொரு நாளும் நம்மைப் பரவசப்படுத்தும் சாகசங்களை இந்தத் தொடரில் பார்க்கலாம்.

மனதில் கருணை இருந்தால், காட்டு விலங்குகளையும் அன்பால் கட்டிப்போடலாம் என்பதை பின்டி மற்றும் ராபர்ட் நமக்கு உணர்த்துகிறார்கள்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு