Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று சொல்கிறார்களே... அதுமாதிரி ஜீபா பசித்தாலும் எதைத் தின்னாது?

கே.ரமேஷ், செஞ்சி.

ஜீபா எப்பவும் ஃபுல்லா தின்னும். வயிறெல்லாம் எப்பவும் ஃபுல்லா இருக்கும். அதனாலே பசிக்கவே பசிக்காது... எப்பூடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மை டியர் ஜீபா !
##~##

 'ஹாய் ஜீபா 'பெர்முடா ரகசியம்’ பற்றி உன்னுடைய எண்ணம் என்ன?

         -எம். தீனதயாளன், கொடுமுடி.

'ஒண்ணு இருக்கு... ஆனா இல்லே. ஒண்ணு இல்லே... ஆனா இருக்கு’ கதைதான் இது. பெர்முடா ட்ரை ஆங்கிள் பத்தி தெரிஞ்சுக்க எல்லாருக்குமே ஆவல். இந்த ஆவலை புரிஞ்சுக்கிட்டு அமெரிக்காவில் ஒரு கோஷ்டி பெர்முடா ரகசியம் பத்தி புத்தகங்கள் எழுத, அது பல லட்சம் பிரதிகள் வித்துச்சு. அதுக்கு அப்புறமா 'பெர்முடால ரகசியமோ மர்மமோ எதுவும் கிடையாது. புயல், மேகமூட்டம், சுழல் காற்று இதனால் விபத்து நடந்து, அந்த வழியா போன கப்பல்கள், விமானங்கள் கடலில் மூழ்கிப் போயிடுச்சு’ன்னு கண்டுபிடிச்சு சொன்னாங்க. உடனே இன்னொரு கோஷ்டி கிளம்புச்சு... விற்பனையில் கலக்கிய அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டது எல்லாமே டூப்பு... அறிவியல் உண்மை இதுதான்’னு சொல்லி புத்தகம் எழுத, அதுவும் லட்சக்கணக்கில் வித்துச்சு. இப்படியா இருக்கிற இந்த விஷயத்தைப் பத்தி நல்லவேளையா நீ என்கிட்டே வந்து கேட்டே. இதே அமெரிக்கா பக்கம் போயி கேட்டு இருந்'தீனா தயாளா’... அந்த ரெண்டு புத்தகத்தையும் உன் தலையில கட்டி இருப்பாங்க

மை டியர் ஜீபா, நீ சச்சின் ரசிகனா இல்லை, டோனி ரசிகனா? ஏதாவது ஒரு பேரை மட்டும்தான் சொல்லவேண்டும்.

எஸ்.கிஷோர், கோவை.

நான் 'சச்சிங் டோனில்கர்’ ரசிகன். இந்த ஒரு பேர்ல உனக்கு ரெண்டு பேர் தெரிஞ்சா நான் பொறுப்பில்லேப்பா

பறவைகள் பறக்கும்போது அவற்றின் கால்களை மடக்கிக் கொள்கின்றனவே... ஏன் ஜீபா?

       -ந. வெங்கடேசன், ஈங்கூர்.

பறவைகள் நடக்கறதுக்கும், லேண்டு ஆகறதுக்கும்தான் கால்கள். பறக்கும்போது அவை தேவைப்படாது. நாம கூடதான் மழை பெய்யும்போது குடையை விரிச்சுப் பிடிக்கறோம். மழை நின்னதும் குடையை மடக்கி வெச்சுக்கறோம் இல்லையா? அதுமாதிரிதான். பறவைகள் கால்களை மடக்கி வெச்சுக்குது. சரி, அப்படியே தொங்கவிட்டுக்கிட்டா என்ன ஆக்கும்னு கேட்டா, பறக்கறப்போ காற்று தடையில்லாம உடலைக் கடந்து போனாதான் அதுக்குத் தகுந்தமாதிரி பறவைகள் தொடர்ந்து பறக்க முடியும். இப்படி வர்ற காற்றுக்குக் குறுக்கே கால்கள் தொங்கிட்டு இருந்தா தடையை ஏற்படுத்தி, பறக்கறதுல சிக்கல் உண்டாகும். இதே டெக்னிக்கைதான் விமானங்களும் செய்யுது. டேக்-ஆஃப் ஆனதுமே சக்கரங்கள் மடங்கி உள்ளே போயிடும். திரும்ப லேண்டு ஆகறதுக்குதான் வெளியே வரும். விமானத்துல பயணிக்கும்போது, செல்போன்ல 'கால்’ பண்ணாதீங்கன்னு சொல்றது கூட ஒரு வகையிலே பறக்கறதுக்கு இடையூறா ஆயிடும்னுதான். விமானத்தோட எலக்ட்ரானிக் சிஸ்டத்தை இது டிஸ்டர்ப் பண்ணிடுமாம்.

டியர் ஜீபா... ஷார்ட்டா, சிம்பிளா ஒரு கேள்வி கேட்கிறேன்... தண்ணீருக்கு ஏன் நிறம் இல்லை?

ரா.ராஜகுரு, நிலக்கோட்டை.

நீ சொல்றது சுத்தமான தண்ணீரா இருக்கும். அது வழியா ஒளி அலைகள் தடையில்லாம கடந்து போயிடும். ஸோ, எந்த நிற ஒளியையும் தடுத்து பிரதிபலிக்காது. ஆனா, இங்கே சென்னை பக்கம் கொஞ்சம் ரா ரா ராஜகுரு...  விதவிதமான கலர்லே ஜனங்க உனக்கு தண்ணீ காட்டுவாங்க

தும்மினாலோ, புரை ஏறினாலோ யாராவது நினைப்பதாக சொல்றாங்களே உண்மையா ஜீபா?

        - எம்.செல்லையா, சாத்தூர்.

உண்மைதான் நம்ம மூக்கின் உள்ளே 'மெடுல்லா அப்லாங்கேட்டா’ என்ற ஒருத்தர் இருக்கார். ரொம்ப கண்டிப்பான காவலாளி. நம் மூளைகிட்ட இருந்து கட்டளை வந்தாதான் ஒவ்வொரு உறுப்பும் செயல்படும். ஆனா, இந்த மூளையின் கட்டளையோ, அனுமதியோ இல்லாம தன்னிச்சையா செயல்பட ஒரு சிலருக்கு ஸ்பெஷல் பர்மிஷன் இருக்கு. அதுல முக்கியமானவர்... இந்த மெடுல்லா அப்லாங்கேட்டா. இவரோட வேலை, மூச்சுக் குழாயில் காற்றை மட்டும் அனுமதிக்கறது. நாம மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்றோடு கலந்தபடி தூசியும் திருட்டுத்தனமா மூக்குக்குள்ளே நுழையப் பார்க்கும். அப்போ 'ஆகா இதுங்க உள்ளே வந்தா நம்ம செல்லையாவுக்கு ஆபத்தாச்சே’ன்னு நினைக்கிற அப்லாங்கேட்டா, உடனடியா புயல் மாதிரி காற்றை ஃபோர்ஸா அடிச்சு, இந்தத் தூசியை ஒரே தள்ளா பிடிச்சு வேகமா வெளியே தள்ளுவார். அதுக்குப் பேருதான் தும்மல். அதேபோல சாப்பாடு ஐட்டம், தண்ணீ இதெல்லாம் தவறி இந்த சுவாசக் குழாய்க்குள்ளே போனா, அதையும் விடாது இந்த அப்லாங்கேட்டா (பேசாம, 'செக்போஸ்ட் கேட்டா’ன்னு பேரு வெச்சிருக்கலாம்). புடிச்சுத் தள்ளி ரகளை பண்ணி வெளியே அனுப்பிடும். இதுதான் புரையேறுவது

இப்படி உள்ளே இருந்துகிட்டு நம்ம நலனைப் பத்தி அக்கறையோடு நினைக்கிற நல்லவரு இந்த காவலாளிதாங்க. இவரைப் பத்தி முழுசா தெரியாததாலே நாம 'யாரோ நினைக்கறாங்க’ன்னு பொத்தாம் பொதுவா சொல்லிக்கறோம்.

ஜீபா... சாப்பிடாம அடம்பிடிக்கிற குழந்தைங்களை எப்படி சாப்பிட வைக்கறது?

  - எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

நான் யோசிச்சதுல ஒரு விஷயம் தோணுச்சு... குழந்தைங்க வயிறும் நம்ம வயிறும் வேற வேற. நாம மூணு வேளை சாப்பிட்டு பழகி இருப்போம். வயிறும் பெரிசு. குழந்தைகளுக்கு அப்படி இல்லை. வயிறு சின்னது... அப்பப்ப பசிக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலே நிறஞ்சிடும்.

குழந்தைக்கு முதல் தடவை சாப்பாடு ஊட்டின சமயத்தைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... நாம என்ன செய்தோம்? எப்படி நாம மூணு வேளை சாப்பிடறோமோ அதேமாதிரி குழந்தையையும் பழக்க முயன்றோம். காலை, மதியம், ராத்திரின்னு அந்தந்த சமயத்துல சாப்பாட்டை ஊட்டினோம். நடுவிலே பலமுறை அதுக்கு பசிச்சு, அடங்கி இருக்கும். அல்லது வேறு எதையாவது சாப்பிட்டோ, குடிச்சோ வயிற்றை நிரப்பி இருக்கும். நம்ம நேரப்படி ஊட்டப் போகும் சமயம் அதுக்கு வயிறு நிரம்பி இருக்கலாம் அல்லது சாப்பிடப் பிடிக்காமல் இருக்கலாம். நோ சொல்லிடும். ரெண்டு தடவை சொல்லப் பழகினதும், அதுக்குப் பிறகு, சாப்பாடு ஊட்ட வந்தாலே நோ சொல்லணும்னு அர்த்தம் பண்ணிக்கிட்டு, அதையே கன்ட்டினியூ பண்ணுது. இதைத்தான் நாம அடம் பிடிக்குதுன்னு சொல்றோம். அதுக்குப் பிடிச்ச விஷயத்தில் டைவர்ட் செஞ்சு, ஏமாத்தி சாப்பாட்டை ஊட்றது தற்காலிகமான தீர்வு. நடுவிலேயே சுதாரிச்சுக்கிட்டா சாப்பிட முரண்டு பிடிக்கும்.

நோ சொல்லாம சாப்பிட வைக்கறது தான் நிரந்தரமான தீர்வு. நாமும் அதோடு உட்கார்ந்து சாப்பிடறது, கூடவே இன்னொருத்தருக்கும் ஊட்டிவிடறது (அவர் நோ சொல்லாம சாப்பிடணும்) இதெல்லாம் அடம்பிடிக்கிற குணத்தை மாற்ற சின்னச் சின்ன யோசனைகள். ட்ரை பண்ணி பார்க்கலாம்

ஜீபா அண்ணாத்தே சம்மர்ல வெயில் தெரியாம இருக்க ஒரு வழி சொல்லேன்

வே.மதியழகன், காஞ்சிபுரம்.

வேற வழியில்லே தம்பி, ராத்திரில மட்டும் வெளியே வா. எப்பூடி?