Published:Updated:

விண்ணில் ஒரு வெற்றி !

விண்ணில் ஒரு வெற்றி !

விண்ணில் ஒரு வெற்றி !

நாம் எல்லோருமே பேப்பர் ராக்கெட் விட்டிருக் கிறோம். ஆனால், உண்மையான ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதைப் பார்க்கும் சந்தர்ப்பம் அரிதானது. அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏப்ரல் 20-ம் தேதி எனக்கு கிடைத்தது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையம், அன்று ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும் கோட்டை மாதிரி மாறி இருந்தது. பலத்த சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப் பட்டோம். பத்திரிகையாளர்கள் பகுதியில்

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருந்து  சற்று தள்ளி கடலை ஒட்டிய பிரதேசத்தில் இருந்த ராக்கெட் ஏவுத்தளம் நம் கண்ணுக்கு நேரடியாக தெரியவில்லை. அங்கே அமைக்கப்பட்டு இருந்த ராட்சசத் திரையில் தயாராக இருந்த ராக்கெட் காட்சி அளித்தது. ஒவ்வொரு கட்டமாக ராக்கெட்டையும் அதற்குள் ரிசோர்ஸ்சாட்-2, யூத் சாட் மற்றும் எக்ஸ் சாட் ஆகிய மூன்று செயற்கை கோள்களை எப்படி பொருத்தினார்கள் என்று விவரமாகக் காட்டியதை பார்த்தபோது விஞ்ஞானத்தின் வீரியம் புரிந்தது.

ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் ஏப்ரல் 18 அதிகாலை 3.42 மணிக்கு தொடங்கியதில் இருந்து டென்ஷனோடு இருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்... இருப தாம் தேதி காலை 10.12 மணியை நெருங்கியபோது பரபரப்பானார்கள். நாமும்தான். 10, 9, 8....2, 1, 0 என்று கவுன்ட் டவுன் ஒலிக்க, நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, 1404 கிலோ எடைகொண்ட ராக்கெட், ஜிவ்வென்று தீ ஜூவாலையை கக்கியப்படி விண்ணுக்கு தாவியது. கண்ணுக்கு எதிரே ஒரு அதிசயம் நிகழ்வதை பார்த்து மெய்சிலிர்த்து நின்றோம். அப்போது, ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே சமயத்தில் சிறகுகடித்து பறக்கிறதோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு அந்தப் பிரதேசமே கைத்தட்டல் ஓசையால் நிறைந்தது.

விண்ணில் ஒரு வெற்றி !

ராக்கெட் கிளிம்பிய பதினேழாவது நிமிடம், 1206 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைகோள் ராக்கெட்டைவிட்டு பிரிந்து துருவப் பகுதியின் சுற்றுவட்டப் பாதையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டதை அறிவித்தனர். மீண்டும் ஒரு முறை கரகோஷம். அடுத்த பதினெட்டாவது நிமிடத்தில், 92 கிலோ எடைகொண்ட யூத் சாட்டும் 106 கிலோ எடைகொண்ட சிங்கப்பூர் செயற்கை கோளான எக்ஸ் சாட்டும் ராக்கெட்டை விட்டு பிரிந்து, பூமியிலிருந்து 822 கி.மீட்டர் உயரத்தில் நிலைகொண்டன. நமது நாட்டைவிட சிங்கப்பூர் செல்வ செழிப்பில் பல படிகள் முன்னணியில் இருந்தாலும், அந்நாடு விண்ணுக்கு செலுத்தும் முதல் செயற்கைக் கோள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரிசோர்ஸ்சாட்-2, நமது நாட்டின் நீர்வளம், நிலவளம் ஆகியவற்றை அவ்வப்போது நமக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். இதனால், நமது மீனவர்களில் இருந்து விவசாயிகள் வரை அத்தனை பேருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

படங்கள்: என்.விவேக்