Published:Updated:

பச்சைத் தங்கம் !

பச்சைத் தங்கம் !

 'ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்  படும் ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்குத் தேவைப்படுவது 800 கிராம்’ என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. ஒரு மூங்கில் குருத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவையானது 800 கிராம்தான். ஆனால், குருத்து தருவதோ 850 கிராம். எனவே, ஆளுக்கொரு மூங்கில் குருத்து அல்லது, குறைந்தது ஒரு வீட்டுக்கு ஒரு மூங்கில் குருத்து இருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். புல் இனத்தைச் சேர்ந்த மூங்கில், தாவர இனங்களிலே மிகவும் விரைவாக வளரக்கூடியது. சாதாரண மனிதன் ஒரு நிமிடத்துக்கு 12 தடவை மூச்சுவிட வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் 14, 15 தடவைகள் மூச்சுவிட வேண்டும். காரணம், சுற்றுப்புறத்தில் பிராணவாயு அவ்வளவு குறைவாக இருக்கும். ஆனால், மூங்கில் காடுகளில் இரண்டு முறை மூச்சை இழுத்துவிட்டாலே போதுமானது. காரணம், அவ்வளவு உயிர்க் காற்று, அதாவது, ஆக்சிஜன் நிரம்பி இருக்கும்.

பச்சைத் தங்கம் !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மூங்கில் மரங்கள், 15 டன் கார்பன்- டை- ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. குறிப்பாக, ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட பீமா இன மூங்கில்கள் 70 டன் கார்பன்- டை- ஆக்சைடை உறிஞ்சுகிறதாம். இதற்காக ஆண்டு தோறும் 'செப்டம்பர்-18’ ஆம் தேதி, உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி ஒரு டன் 6000 ரூபாய். அதற்குப் பதில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால், 2000 ரூபாய் குறையும். மேலும், நிலக்கரியை எரிக்கும்போது காற்று மண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பனே மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.

இதன் பயன்பாட்டைக் கருதி இவற்றைப் பச்சைத் தங்கம் என்றும் அழைக்கிறார்கள்.