Published:Updated:

கார்ட்டூன் வி.ஐ.பி.! மீட்டிங்...

கார்ட்டூன் வி.ஐ.பி.! மீட்டிங்...

பிக் சிட்டி! மிகப் பெரிய நகரம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பேனா, பென்சில், ரப்பர், பரீட்சை அட்டை... நாம சாப்பிடுவோமே... பாப்கார்ன், ஐஸ்... என அந்த வடிவங்களில் பெரிய்ய வீடுகள்! க்ரீம் பிஸ்கட் வடிவத்தில் பள்ளிக்கூடம், நூடுல்ஸ் மாதிரி பார்க்! அங்கே வந்த சுட்டிக்கு ஒரே ஆச்சரியம். குல்பி ஐஸ் வடிவத்தில் நாக்கில் எச்சில் ஊறவைத்த ஒரு கட்டடத்தின் பால்கனியில் இருந்து யாரோ கை காட்டினார்கள். அட... ஆஸ்வால்ட் ஆக்டோபஸ்! மெலிதான பாப்கின்ஸ் மிட்டாய் மழை பெய்யத் தொடங்கியது. சுட்டியை மாடிக்கு அழைத்து, தன் நான்கு கைகளில் ஒன்றை நீட்டி கை குலுக்கியது.

சுட்டி: ஆஸ்வால்ட், உன்னைச் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கலை.

ஆஸ்வால்ட்: ஐ பீல் சோ ஹாப்பி! உன் பேரு என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கார்ட்டூன் வி.ஐ.பி.!  மீட்டிங்...
##~##

சுட்டி: என் பெயர் தீபிகா. சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் ரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். உன்னை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்.

ஆஸ்வால்ட்: ஐ ரியலி லைக் இட் (அதற்குள் லொள்! லொள்! சத்தம்.)

தீபிகா: உன் வீனி நாய்க்குட்டி கத்தறா மாதிரி இருக்கே...

ஆஸ்வால்ட்: ஓ! உனக்கு வீனியை ஏற்கனவே தெரியுமா? வீனி கேர்ள் என் பெட்.

தீபிகா: அதற்கு கொஞ்சம் வென்னிலா டாக் பிஸ்கெட் வாங்கி வந்திருக்கேன். தரலாமா?

ஆஸ்வால்ட்: வாவ்! வீனியின் ஃபேவரைட். (வீனி  ஓடிவந்து, சுட்டியிடம் கொஞ்சி... பிஸ்கட் வாங்கி வாயில் கவ்விக்கொண்டு ஓடியது).

கார்ட்டூன் வி.ஐ.பி.!  மீட்டிங்...

தீபிகா:  உன்னை பல காரணங்களுக்காக  பிடிக்கும். உன் நிறம், இரக்க சுபாவம், மற்றவர்களுக்கு உதவுதல்,  அருமையாகப் பாடுவது, பியானோ வாசிக்கும் திறமை...

ஆஸ்வால்ட்: ஓ... புகழ்ச்சி போதும் ஃப்ரெண்ட்!

தீபிகா: உன்னைப் படைத்தவர்... முதல் கார்ட்டூன் பிரவேசம்..?

ஆஸ்வால்ட்: டான் யாக்காரிமோ (ஞிணீஸீ சீணீநீநீணீக்ஷீவீனீஷீ) என்னை உருவாக்கிய ஓவியர். லிசா ஈவ் ஹப் மன் (லிவீsணீ ணிஸ்மீ பிuதீனீணீஸீ) ஐயும் சேர்த்துக்கோ. இருவரும் சேர்ந்து என்னையும் நண்பர்களையும் 2001-ல் உருவாக்கினார்கள்.

தீபிகா: உன் நண்பர்கள் என்றதும் ஞாபகம் வருது... அவர்கள் எல்லாம் எங்கே?

ஆஸ்வால்ட்: வெய்ட்! ஐ வில் கால் தெம். (போனை எடுத்து ஒவ்வொருவரையும் அழைத்தது ஆஸ்வால்ட்) வீ... வில் வெய்ட் தீபிகா. எல்லோரும் வருவாங்க!

தீபிகா: நன்றி ஆஸ்வால்ட்! அதற்குள் உன் முதல் படம், எபிசோடு பற்றி சொல்லலாமே...

ஆஸ்வால்ட்: நிக் ஜூனியர் மற்றும் போகோ ஆகிய குழந்தைகள் டி.வி. சானல்களில் 2001 ஆகஸ்ட் மாதம் நான் அறிமுகம் ஆனேன். பெட்ரிக் ஸ்ட்ராப்பல் என்பவர் இயக்குனர். மொத்தமாக முதலில் தயாரானது இருபத்து நாலே எபிசோட்தான். பிறகு வரவேற்பு அதிகமாக இருந்ததால் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள்.

கார்ட்டூன் வி.ஐ.பி.!  மீட்டிங்...

தீபிகா: எல்லாரும் வந்துட்டாங்க. வாவ்! இதோ... பெங்குவின் ஃப்ரெண்ட் ஹென்றி!

ஆஸ்வால்ட்: மீட் அவர் நியூ ஃப்ரெண்ட் தீபிகா... கொஞ்சம் எல்லாரும் உங் களை,  நீங்களே அறிமுகம் செஞ்சுக்குங்க  ப்ளீஸ்!

ஹென்றி: நான்தான் ஹென்றி. ஆஸ்வால்டின் கீழ் வீட்டில் வசிக்கிறேன். நான் ரொம்ப பிசி. என் ஹாபி... விதவிதமான ஸ்பூன் களைச் சேர்ப்பது. டிவியில் எனக்குப் பிடிச்சது, 'பெங்குவின் பெட்ரோல்’. எப்போதும் மீன் உணவே பிடிக்கும். எல்லாவகை பனிக்கட்டி களையும் பற்றி நிபுணத்துவ விளக்கம் அளிக்கப் பிடிக்கும்.

தீபிகா: தாங்க்ஸ்! அடுத்து சூரியகாந்தி டெய்ஸி.

டெய்ஸி: ஐ ஆம் டெய்ஸி. ஆஸ்வால்ட் மற்றும் ஹென்றியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். பலவகைப் போட்டிகளில் கலந்துகொள்வதே என் ஹாபி. விதவிதமான இலைகளை கலெக்ட் பண்றது பிடிக்கும். நான் ஓட்டற சைக்கிளுக்கு பெரியதாக ஒரே சக்கரம்தான் இருக்கு.

தீபிகா: அழகா சொன்னே. நன்றி! அந்தப் புழு கார்டினா, மேடம் பட்டர்ஃபிளை.

கார்டினா: எனக்குப் பேச....

மேடம் பட்டர்ஃபிளை: ஓ.கே... ஓகே. இது கார்டினா. என் செல்லக் குட்டி. இப்பதான் பேசவே கத்துக்கிறா. இந்தப் பொண்ணு என்னைப் படுத்தற பாடு... எப்பப்பாரு இவளை யாராவது பார்த்துக்கணும். ஆனால், எனக்கு ஆஸ்வால்ட் மற்றும் நண்பர்களுடன் டின்னர் சாப்பிடப் பிடிக்கும்.

கார்ட்டூன் வி.ஐ.பி.!  மீட்டிங்...

தீபிகா: தேங்க்யூ மேடம்! அந்த முட்டை நண்பர்கள் லியோ, எக்பர்ட்...

எக்பர்ட்: லியோவும் நானும் டுவின்ஸ். நாங்கள் ஒன்றாகப் பிறந்த முட்டைகள். நல்லா அரட்டை அடிப்போம்.

ஆஸ்வால்ட்: பொன்கோ... டிராகன் வரவில்லை. அப்புறம் எங்க கூட்டத்தின் ஒரே மனிதர் ஜோனி ஸ்னோமான் தனது சகோதரர் ஃபில்லை சந்திக்க வடக்கே போயிருக்கிறார்.

தீபிகா: உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! சூப்பரா டிரஸ் பண்ணி இருக்கீங்க. எங்கேயாவது அவுட்டிங்கா?

ஆஸ்வால்ட்: நாங்கள் எல்லாரும் இன்றைக்கு சாம்மி ஸ்டார் ஃபிஷ்... ம்யூசிக் ஷோவுக்கு போகப் போறோம். அங்கே பியானோ வாசிக்க எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல.

தீபிகா:  கட்டாயம் கிடைக்கும். ஆல் தி பெஸ்ட்!

(எல்லாரும் சுட்டியை வழி அனுப்பினார்கள்)