Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

நானே போதும் !

பிட்ஸ்

ஒரு சமயம் ஓர் ஆங்கிலேயப் பத்திரிகையாளர் காந்திஜியை சந்தித்துப் பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது, அவர் காந்தியடிகளைக் கிண்டல் செய்யும் எண்ணத்துடன் ''உங்கள் மக்கள் உங்களை ஏன் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டனர். வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டார்.

காந்தியடிகள் சிரித்துக் கொண்டே, ''உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத் திருக்கலாம்'' என்றார்.

ஊசி இருக்கு !

##~##
பிட்ஸ்

கி.வா.ஜ. சிறுவனாக இருக்கும்போதே சிலேடையாகப் பேசுவதில் வல்லவராக விளங்கினார்.

ஒரு நாள் அவருடைய அம்மா, முந்தைய தினம் செய்த உப்புமாவைக் கொடுத்து அதைத் தின்னும்படி கூறினார்.

கி.வா.ஜ.வோ சாப்பிடாமல் அடம் பிடித்தார். உடனே தாய் கோபமாக, ''உப்புமாவை தின்ன முடியவில்லையோ. அது தொண்டையில் குத்துகிறதோ'' என்று கேட்டார்.

கி.வா.ஜ. அதற்கு, ''ஆமாம். தொண்டையில் குத்துகிறது. ஏனெனில் ஊசியிருக்கிறதே'' என்றார்.

ஒரே ஒருவர் !

பிட்ஸ்

நோபல் பரிசுபெற்ற மகாகவி தாகூருக்கு கொல்கத்தாவில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. விழாவுக்குத் தலைவர், டாக்டர்.ராதாகிருஷ்ணன். பல பெரிய மனிதர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டிருந்தனர்.

ஒரே ஒருவர் மட்டும் தமிழில் கையெழுத்திட்டிருந்தார். அவர் யார் தெரியுமா சுட்டீஸ்? நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.

பின்வாங்க மாட்டேன் !

பிட்ஸ்

காந்தியும் நேருவும், ஒரு முறை பாத யாத்திரை செல்கையில்... வழியில் ஒரு பள்ளம் குறுக்கிட்டது. நேரு அதைத் தாண்டிக் கடந்தார். காந்தியோ, ஒரு மரப் பலகை போட்டுக் கடந்தார். நேரு, ''என்னைப் போல் நீங்களும் தாவிக் கடந்திருக்கலாமே?'' என்றார். அதற்கு காந்தி, ''பள்ளத்தைத் தாண்ட எவ்வளவு தூரம் பின்னால் சென்றீர்கள் என்பதைத்தான் பார்த்தேனே? நான் உங்களைப்போல் பின்வாங்க விரும்பவில்லை. இந்த இடத்தில் இருந்தே முன்னேற விரும்புகிறேன்'' என்றார்.

பிட்ஸ்