Published:Updated:

சுட்டிக்குயில் சீமா !

சுட்டிக்குயில் சீமா !

 சுறுசுறு, துறுதுறுவென இனிமையான பேச்சு மூலம் அனைவரையும் கவர்கிறாள் சீமா. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் என பல லோக்கல் சேனல்களில் ஆறு வருடங்களாக கலக்கிவருகிறாள்.

சுட்டிக்குயில் சீமா !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சீமாவுக்கு சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மோ.வன்னஞ்சூர் கிராமம். சைக்கிள் பழுது பார்க்கும் முகுந்தரங்கன்-சித்ராதேவிக்கு 3-வது பெண் குழந்தையாகப் பிறந்தவள். தனது  அக்காவை வறுமையின் காரணமாக மேற்படிப்பு படிக்க வேண்டாம் என்று பெற்றோர் கூறியபோது, ''நீ கவலைப்படாதே... நான் உன்னைப் படிக்க வைக்கிறேன்'' என்று கூறி, அக்காவை டீச்சராக்கி இருக்கிறாள். தானும் படித்துக்கொண்டே  தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறாள்.

5-வது படிக்கும்போதே டி.வி. தொகுப்பாளராக அறிமுகமானாள். 'ஹாய் குட்டீஸ்’ என்ற குழந்தைகள் நிகழ்ச்சி முதல், விருப்பப் பாடலை ஒளிபரப்புவது என, பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்த சீமா, அடுத்து 12-ஆம் வகுப்பு என்பதால், படிப்பில் அதிக கவனம் செலுத்த, தற்போது ஒரேயரு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வரு கிறாள்.

''சின்ன வயசிலேயே என் கையை மைக் போல வெச்சுட்டுப் பேசுவேன். அப்போ... என்னோட பெற்றோர் திட்டுவாங்க. பள்ளியில படிக்கிறப்ப, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி என கலந்துக் கிட்டேன். அதுதான் எனக்கு தொலைக் காட்சியில் பதற்றம் இல்லாம நிகழ்ச்சித் தொகுப்பாளராப் பணியாற்ற உதவிச்சு. இந்தத் தொகுப்பாளர் பணி கொஞ்ச நாளைக்குத்தான். டாக்டராகி சேவை செய்றது  தான் என்னோட லட்சியம்'' என்கிறாள் சீமா.

இது மட்டுமா? சீமாவுக்கு பாடகி சுசீலாவை மிகவும் பிடிக்குமாம். ''அவரை ரோல் மாடலா நெனைக்கிறேன். என்னால பல பாடல்களைக் கோர்த்து ஒரே பாடலா... அதாவது, கலவைப் பாடலா பாடமுடியும்'' என்கிறாள் இந்த சுட்டிக் குயில்.

''ஜெர்மன் ராணுவத்துல ஒரு அங்கிள் எனக்கு ரசிகரா இருக்கார். அதுபோல, சென்னை பி.எஸ்.என்.எல்.லயும் ஒருத்தர். எல்லாத்துக்கும் மேல கள்ளக்குறிச்சி பக்கத்துல கர்ணாபுரம் என்கிற ஊர் முழுவதுமே எனக்கு ரசிகர்கள்தான். நான் அங்க போயிட்டேன்னா திரும்பி வரவே மனசு வராது. அவ்ளோ அன்பு என் மேல அவங்களுக்கு! சங்கரா புரத்துல இருக்கிற கிறிஸ்டியன் ஆதரவற்றோர் உயர்நிலைப் பள்ளியில உள்ள குழந்தைகளுக்கு என்னோட பிறந்த நாள் அன்று மதியம் சாப்பாடு போடுவேன்'' என்று சொல்லி பிறருக்கு உதவ வேண்டும் என்று நம்மையும் தூண்டுகிறாள் சீமா.

-அற்புதராஜ்
படம்: எஸ்.தேவராஜ்