Published:Updated:

சீட்டுக்கட்(டு)டட ராஜா !

சீட்டுக்கட்(டு)டட ராஜா !

கே.கணேசன்

சீட்டுக்கட்(டு)டட ராஜா !

சிமென்ட் பயன்படுத்திக் கட்டப்படும், கான்க்ரீட் கட்டடங்களே... எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவோம் என பயமுறுத்துகின்றன. ஆனால், பசை, கயிறு, செல் லோஃபன் டேப், மடிப்பு இப்படி எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் சீட்டுக் கட்டு களை வைத்து கட்டடங் களைக் கட்டுகிறார் பெர்க். அவை, நீண்ட நேரத் துக்கு நிலையாக நின்று பார்வை யாளரைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த சீட்டுக்கட்டு அட்டைகளை வைத்து கட்டடங்களை உருவாக்கு வதில் கில்லாடி பெர்க். இக்கலையை எட்டு வயதில் தனது தாத்தாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார். நாற்பது வயதுக்கும் மேலாகும் இவர், 1992-ஆம் ஆண்டில் மிக  உயரமான சீட்டுக்கட்டு கட்டடத்தை உருவாக்கி, கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார். அதேபோல, மிகப் பெரிய சீட்டுக் கட்டுகளால் ஆன கட்டடத்தையும் உருவாக்கி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவர், தனது சாதனையைத் தானே முறியடித்து பெரிய மாடல்களைக் கட்டுவார்.

சீட்டுக்கட்(டு)டட ராஜா !

வால்ட் டிஸ்னியின் சின்ட்ரெல்லா கோட்டை போன்ற உலகின் புகழ்பெற்ற கட்டட அமைப்புகளைத் தனது கலைத் திறமையால் சீட்டுக் கட்டின் மூலம், நம் கண்முன் நிறுத்துவார். ஒவ்வொரு வடிவத்தையும் உருவாக்க ஆயிரக்கணக்கான சீட்டுக்கட்டுகள் தேவைப்படும். அத்துடன்,  இப்படி கட்டடங்களை உருவாக்க பொறுமையும் முயற்சியும் கண்டிப்பாகத் தேவை'' என்கிறார் இந்த சீட்டுக்கட்(டு)டட ராஜா பெர்க்.