கே.கணேசன்

நவாங் கோம்பு ஷெர்பா, முதல் முதலாக 1953-ல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹில்லாரியின் குழுவில் இருந்தவர் களில் மிகவும் சிறியவர். மலையேறும் குழுவினருக்கு உணவு மற்றும் தேவையான உபகரணங்கள் மற்றும் கூடாரப் பொருட்களை எடுத்துச் செல்வது இவரது பணி. எட்மண்ட் ஹில்லாரியுடன் இணைந்து சாதனை புரிந்த டென்சிங் நார்கே இவரது மாமா.

திபெத் நாட்டைச் சேர்ந்தவரான நவாங் கோம்பு, பத்து ஆண்டுகள் கழித்து, 1963-ல் ஜிம் விட்டேகர் தலைமையிலான அமெரிக்கக் குழுவில் பயண வழிகாட்டியாகச் செயல் பட்டார். அதுதான் அமெரிக்கா சார்பாக முதல் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகண்ட குழு. அப்போது, இவர் முதல் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

அதேபோல, 1965-ல் இந்தியாவின் சார்பில் கமாண்டர் எம்.எஸ்.கோலியின் தலைமையில் சென்ற குழுவில் இடம்பெற்று, இரண்டாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை புரிந்தார். அப்போது எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் நபர் என்று பெயர் பெற்றார். இதைத் தவிர, முதல் முதலாக நந்ததேவி சிகரத்தின் உச்சியை அடைந்ததும் இவர்தான். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி, இவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து இருக்கிறார்.

இவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் பெருமை மிக்க விருதுகளான பத்ம ஸ்ரீ விருது 1964-ஆம் ஆண்டும், பத்ம பூஷன் விருது 1965-ஆம் ஆண்டும் அளிக்கப் பட்டன. 1986-ஆம் ஆண்டில் 'டென்சிங் நார்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ம் இவருக்கு வழங்கப்பட்டது. நவாங் கோம்பு இமயமலைச் சிகரங்களில் ஏறுபவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கினார். டார்ஜிலிங் பகுதியில் வசித்துவந்த நவாங் கோம்பு ஷெர்பா, கடந்த ஏப்ரல் 24 அன்று, தனது 79-வது வயதில், உடல் நலக்குறைவால் காலமானார்.