Published:Updated:

வருங்கால விஞ்ஞானியாக...

வருங்கால விஞ்ஞானியாக...

 ''இந்தியாவில் விஞ்ஞானிகள் உருவாவது குறைவு. இயற்பியல், வேதியியல் படிப்பவர்கள்கூட வேலையில் சேருகிறார்களே தவிர, ஆராய்ச்சியில் ஆர்வம் செலுத்துவதில்லை'' என்று நோபல் விஞ்ஞானி வெங்கட்ராம ராமகிருஷ்ணன் சொல்லி இருந்தார்.

வருங்கால விஞ்ஞானியாக...
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவில் 95% சுட்டிகளுக்கு விண்வெளி பற்றி தெரிவதில்லை. அமெரிக்கா, ஐரோப்பாவைப்போல இங்கும் அதிக விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக் கத்தில் சூரியக் குடும்பம், வானியல், செயற்கைக் கோள்கள் பற்றிய முழு அறிவைப் பெற ஐ.டி இளைஞர்கள் வீsக்ஷீஷீளீவீபீs.நீஷீனீ என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளனர்.

விண்வெளிக்கு செயற்கைக்கோள் என்ன டெக்னாலஜி மூலம் அனுப்பப்படுகிறது, என்ன என்ஜின் பயன்படுத்தப் படுகிறது என்றும், இயல்பான அடிப்படை அறிவியல், விண்வெளிப் பயணத்தில் எந்த உடையைப் பயன் படுத்துவது என எல்லாவித அறிவையும் வளர்த்துக் கொள்ள இந்த இணையதளம் உதவுகிறது. இயற்கைப் பேரழிவைத் தடுப்பதில் இருந்து... விண்வெளி தொடர் புடைய செய்திகள், விளையாட்டுகள் அதிகம் கொட்டிக் கிடக்கின்றன. விண்வெளி தொடர்புடைய அத்தனை சாஃப்ட்வேர்களையும் டவுன்லோடு செய்து, க்விஸ் நிகழ்ச் சியாகவும் தகவல்கள் தரப்பட்டுள்ளது.

மொழித்திறன், பறவைகள், விலங்குகள், உடல்நலம், நடனம், உடல்மொழி, விளையாட்டு ஆளுமை, கல்வி, கலாச்சாரம், கதைகள் போன்றவற்றுக்கு junior wisdom.com உள்ளது.

இந்த இணையதளங்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய டேவிட் ராஜா, ''ஏரோநாடிகல் என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். குடும்பச் சூழ்நிலையால் படிக்க முடியவில்லை. என் ஆராய்ச்சிக் கனவை இந்த இரு இணையதளங்கள் மூலம் நனவாக்கி வருகிறேன்'' என்றார்.

 -க.நாகப்பன்
படம்: பு.நவீன்குமார்