கெளதம் போனான் டாக்டரிடம்!

டி.தணிகைவேல்

வெயில் காலம் வந்துட்டாலே சுட்டிகளை வெளியில போய் விளையாடாதே, கண்டதை சாப்பிடாதேன்னு லீவுலயும் பெற்றோர்கள் ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதிக்கிறார்கள். வெயிலால ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அதிலிருந்து எப்படி விடுபடுறதுங்கிறதை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்குறதுக்காக வேலூர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் பத்தாவது படிக்கும் கௌதம் பொது மருத்துவரான டாக்டர் ஆர்.லஷ்மண் அவர்களை சந்தித்தான்.

"ஹலோ டாக்டர், ஒரே வெயிலு. அடிக்குற வெயில்ல மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு'' என்று பெரிய மனுசன் போல் பேசினான் கௌதம்.

"ஹாய் கௌதம்! இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஏராளமான வழிகள் இருக்கு'' என்று கூலாக பதில் சொல்ல ஆரம்பித்தார் டாக்டர்.

வெயிலினால் என்னென்னெ உபாதைகள் ஏற்படும் டாக்டர்?

கடுமையான வெயிலினால் உடலில் இருக்கும் நீர்த்தன்மை குறையும். இதனால் உடல் சோர்வும், 'ஹீட் ஸ்ட்ரோக்'கும் ஏற்படும். அதனால் ஒரு சிலருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வருவது... மயக்க நிலை... அமைதியற்ற மனநிலை போன்ற உபாதைகள் ஏற்படும்.

வெயில் காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் டாக்டர்?

நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துகள் அதிகளவு காய்கறிகளில் தான் இருக்கின்றன. எனவே காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். லெமன் ஜூஸ், இளநீர், தர்பூசணி போன்ற வற்றையும் அதிகமாக சாப்பிடலாம்.

எந்த மாதிரியான உணவு வகைகளை தவிர்க்கணும் டாக்டர்?

காரம் இல்லாத உணவுகளைதான் வெயில் காலங்களில் சாப்பிடணும். உணவில் காரம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் ஜீரணமின்மை, வயிற்றுக்கடுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதேமாதிரி வெயில் காலங்களில் சிக்கன், மட்டன் போன்ற நான்-வெஜ் அயிட்டங்களையும் குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வயிறு நிறைய மூக்குப் பிடிக்க சாப்பிடக்கூடாது.

காபி, டீ போன்றவையும் கூடாது. ஏன்னா, காபியில் இருக்கும் 'கேபின்' என்கிற பொருள் உடலில் உள்ள வியர்வை துளைகளில் தடை ஏற்படுத்தி வியர்வை வெளி வருவதை தடுத்துவிடும். வியர்வை சரியாக வெளியேறா விட்டால் உபாதைகள் ஏற்படும்.

வெயிலுக்கு எந்த மாதிரியான டிரஸ் போடணும் டாக்டர்?

காட்டன் டிரஸ்தான் வெயிலுக்கு உகந்தது. அதிலும் உடலை இறுக்கி பிடிக்கிற வகையில் டிரஸ் பண்ணாமல் நல்ல லூசாக இருக்கும் வகையில் டிரஸ் பண்ண வேண்டும்.

டாக்டர், எனக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கொளுத்துற வெயில்ல கிரிக்கெட் ஆட போகாதேன்னு வீட்ல தடை போடுறாங்க.அப்படின்னா எந்த நேரத்துலதான் நான் கிரிக்கெட் விளையாடுறது?

நம் உடலோட நார்மல் வெப்பம் சராசரி 37 டிகிரி. ஆனா, வெயில் 45 டிகிரிக்கு மேல இருப்பதால் அந்த நேரத்துல எது செஞ்சாலும் உடல்நலத்துக்கு கெடுதலாகத்தான் முடியும். காலையில பத்து மணியிலிருந்து மாலை அஞ்சு மணி வரை வெயில் அதிகமாக இருக்கும். அப்போ விளையாடாதே! அந்த சமயத்தில் இன்டோர் கேம்ஸ் விளையாடு. வெளியில் போய்தான் விளையாடணும்னு நினைச்சா, 'ஸ்விம்மிங்' செய்யலாம்.

எப்போ பார்த்தாலும் தண்ணி குடி... தண்ணி குடின்னு அம்மா சொல்லிக் கொண்டே இருக்காங்க. இது ஏன்னு எனக்கு புரியவேமாட்டேங்குது டாக்டர்?!

வெயில் காலத்துல நம் உடம்புல இருக்குற நீர்சத்தெல்லாம் வியர்வையா வெளியேறிடும். அதை ஈடு கட்டி, உடல்நிலையை சமமாக வெச்சுக்க அதிகமா தண்ணீர் குடிக்கணும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு மூணு லிட்டரில் இருந்து நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்கணும். பெரியவர்கள் கொஞ்சம் கூடுதலா தண்ணீர் குடிக்கணும். அதுக்காக 'ஜில்'லுன்னு ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. மிதமான குளிர்ச்சி உள்ள தண்ணீர் குடிக்கணும்.

ஒரு கூல் டிப்ஸ் சொல்லுங்க டாக்டர்?

வெயில் காலத்துல ஒரு நாளைக்கு குறைந்தது மூணு தடவையாவது குளிக்கணும். சோப்பு போட்டு குளிக்கணும்னு அவசியம் இல்லே. தோல் வறண்டு போவதை தவிர்க்கத்தான் குளியல்!

இன்னொரு முக்கியமான விஷயம், அதிக வெயிலை தவிர்க்க அதிகமான மரங்கள் தேவை. அதனால் சுட்டிகள் இப்போதே மரம் வளர்க்க முயற்சி பண்ணுங்க. ஒவ்வொருத்தரும் ஒரு மரமாவது கண்டிப்பா வளர்க்கணும்'' என்றார் டாக்டர்.

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான் கௌதம்.

படங்கள் எம்.ஆர்.பாபு.