பிரபலங்களின் திருப்பு முனைகள்!

ல.சி.சந்தானமூர்த்தி

ஹாங்காங்கில் வசித்த புரூஸ்லீ, பிறந்தது அமெரிக்காவில். மூன்று மாத குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர்கள் ஹாங்காங் வந்துவிட்டார்கள். பதினெட்டு வயது அடைந்த லீ, எப்போதும் துருதுருவென இருப்பான். இவனின் நடவடிக்கையால் பெற்றோர்கள் மிகுந்த கவலையடைந்தனர். இவர்கள் இருக்கும் தெருவில் எவ்வித தீமைகள் நடந்தாலும் அதை தட்டிக்கேட்கும் புரூஸ்லீக்கு எதிரிகள் அதிகமாயினர். ஆனால் அந்தத் தெருவில் வசிப்பவர்களிடம் புரூஸ்லீக்கு மதிப்பும், மரியாதையும் கூடியது. புரூஸ்லீயின் குடும்பமோ, சீன பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் நிறைய ஈடுபாடு கொண்டதாக இருந்தது. பெற்றோருக்கு தனது மகனின் எதிர்காலம் குறித்த கவலை!

பதினெட்டு வயது முடியும் பொழுது புரூஸ்லீ இருபது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஆனாலும் புரூஸ்லீயின் ஒரே கனவு அமெரிக்கா சென்று ஹாலிவுட்டில் நடிப்பதுதான்! இந்தக் கனவுகளுடன் ஹாங்காங்கில் சுற்றித் திரிந்த பொழுதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுது ஹாங்காங் நகர வீதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. எப்பொழுது வருவார்கள், எந்த வீட்டில் கொள்ளை அடித்துச்செல்வார்கள். எந்தக் கடையை அடித்து நொறுக்குவார்கள் என்ற பயத்தில் மக்கள் எந்நேரமும் வாழ வேண்டியிருந்தது.

இதை கண்டு வேதனை அடைந்த புரூஸ்லீ, தன் முன்னோர்களின் பாரம்பரிய கலைகளான கராத்தே மற்றும் குங்பூ-ஐ தீவிரமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இந்த தற்காப்பு கலைகளை பயன்படுத்தி சமூக விரோதிகளை அடக்க முடியும் என்று நம்பிய புரூஸ்லீ, இது தனிமனிதன் செய்யக்கூடியது அல்ல என்று உணர்ந்து, பல மாணவர்களை சேர்த்து சீன பாரம்பரிய கலைகளை சொல்லிக்கொடுத்தார். ஹாங்காங் அரசாங்கமே சமூக விரோதிகளை எப்படி அடக்குவது என்று திணறியபோது புரூஸ்லீ தலைமையிலான இந்த மாணவர் படை அதை சாதித்தது. சமூக விரோதிகளின் கோபம் புரூஸ்லீயின் பக்கம் திரும்பியது.

ஏதாவது சண்டையில் சமூகவிரோதி களோடு சிக்கிக் கொள்ளும் புரூஸ்லீக்கு ஒரு கட்டத்தில் ஹாங்காங் போலீசாராலும் தொல்லை வந்தது. 'மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ?!' என்ற அச்சத்தில் புரூஸ்லீயை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்தார்கள். ஹாலிவுட் சென்று உலக புகழ் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற கனவில் இருந்த புரூஸ்லீயும் சந்தோஷத்தோடு கிளம்பினார். 100 டாலர் பணத்தை மகனின் செலவுக்காக கொடுத்தார் புரூஸ்லீயின் அப்பா. மேலும் அமெரிக்காவில் தன்னுடைய பழைய நண்பன் வீட்டில் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.

அப்பொழுது ஆசிய கண்டத்தில் இருந்து வருபவர்கள் எவரையும் அமெரிக்கர்கள் ஒரு மனிதனாகக்கூட மதிப்பதில்லை. டீக்கடைகள், ஹோட்டல்கள், மற்றும் மிக கீழ்த்தரமான வேலைகளை செய்யவே ஆசிய மனிதர்களை பயன்படுத்தினர். நடிக்க வாய்ப்பு கேட்டு போகும்போது புரூஸ்லீயின் அழகில்லாத முகம், மெலிந்த உடல் இவற்றை கண்டு கிண்டலும், கேலியும் செய்தனர். அமெரிக்காவில் சுரங்க தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து பசியை போக்கிக் கொண்ட புரூஸ்லீ, பிளாட்பாரங்களிலே பல இரவுகளை கழித்தார்.

அமெரிக்காவில் இருப்பதைவிட, ஹாங்காங் செல்வதே மேல் என நினைத்து பிறந்த ஊரைவிட்டு வளர்ந்த ஊருக்கே திரும்பவும் பயணம் செய்தார். அப்போது ஹாங்காங்கில் சீன பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. புரூஸ்லீ அக்கலைகளை இன்னும் தெளிவாக கற்றுக்கொள்வதென முடிவெடுத்தார். இவரது தீவிரமான முயற்சிக்கும், பயிற்சிக்கும் ஹாங்காங் திரை உலகம் 1971-ல் 'தி பிக்பாஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் புரூஸ்லீயின் வீட்டு கதவை தட்டிக் கொண்டே இருந் தாலும், அமெரிக்க ஹாலிவுட் ஏக்கம் புரூஸ்லீயின் அடி மனதில் இருந்து கொண்டே இருந்தது. 1973-ல் 'த ரிட்டன் ஆஃப் த டிராகன்' திரைப்படம் ஹாங்காங்கில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் அந்த படம் பற்றி பேசப்பட்டது. அந்த பேச்சு ஹாலிவுட்டின் காதுகளிலும் கேட்டிருக்க வேண்டும். 'என்டர் த டிராக'னில் நடிக்க புரூஸ்லீக்கு அழைப்பு வந்தது. இதுதான் முப்பத்தி இரண்டு வயதிற்குள் புரூஸ்லீ உலக புகழ்பெற முக்கியமான திருப்பு முனையாக இருந்தது.

இன்று நாம் எல்லோரும் விரும்பக்கூடிய கராத்தே மற்றும் குங்ஃபூ போன்ற சீன பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் தனது படங்களின் மூலமாக கொண்டு சேர்த்த புரூஸ்லீ ஹாலிவுட் வரை சென்று சாதனை படைக்க அவருடைய முன்னோர் களின் பாரம்பரிய விளையாட்டுதான் ஆயுதமாக இருந்தது.