உன்னோடு ஒரு நிமிஷம்!

முடிவெடுக்கப் பழகுவோம்!

வெ.இறையன்பு I.A.S.

தலைமைப் பண்புடன் திகழுபவர்கள் மட்டுமே தாங்கள் புகுந்த துறைகளில் எல்லாம் புதுமையை புகுத்துகிறார்கள்.
அனைவரையும் அவர்கள் சம்மதிக்கச் செய்து சாதனைகள் படைக்கிறார்கள்.

முடிவு எடுப்பதுதான் தலைமைக்கு முக்கியம். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பவர்கள் தலைவர்களாக தகுதி பெறுகிறார்கள்.

சிலரால் எந்த துணி வாங்குவது என்று கூட துணிவுடன் முடிவெடுக்க முடிவதில்லை. பொறுமை, ஆழ்ந்த கவனம், தீர்மானம், திறந்த மனது, கூர்ந்த மதி, விளிம்பு வரை விழிப்புணர்வு ஆகிய பண்புகள் அமையப்பெற்றால் மட்டுமே முடிவுகள் முத்துக்களாக ஒளிரும், இல்லாவிட்டால் சொத்தை களாக சொதப்பும்.

‘நான் நினைப்பது மட்டுமே சரி’ என எண்ணுகிற எவரும் சரியான முடிவுகளை எடுப்பதில்லை. அவசரப்படுபவர்கள் கூழாங்கற்களை வைரங்களாக எண்ணி குழப்பிக் கொள்பவர்கள். கவனம் சிதறுபவர்கள் கைகளை கத்தியில் அறுத்துக் கொள்பவர்கள். தீர்மானம் இல்லாதவர்கள் எடுத்த முடிவை அடிக்கடி மாற்றி, எடுபடாமலேயே இருந்துவிடுவார்கள்.

புத்தியை தொடர்ந்து செம்மையாக்குவது படிப்பினாலும், சிந்தையாலும் பிரச்னையின் மையத்திலேயே எல்லா புலன்களையும் ஒரு சேர குவிப்பதே உச்சபட்ச விழிப்புணர்வு!

ஒரு சின்ன சம்பவத்திற்கு எண்ணற்ற திக்குகளில் சிந்திப்பவர்கள், வாழ்க்கையையே மாற்றப்போகிற நிகழ்வின் போது சுயமாக, அவசர முடிவு எடுத்து அவதிப்படுவார்கள். முதலில் பிரச்னையை கண்டுகொள்வது நுண்ணறிவு,அதற்கான தீர்வுகளை தெரிவது அடுத்தபடி, பின்னர் அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது முத்தாய்ப்பு!

நாம் எந்த படிப்பு படிக்க வேண்டும். எந்த பணி செய்ய வேண்டும் போன்ற வாழ்வை தீர்மானிக்கிற விஷயங்களில் மிகவும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பயிர்களை நேசிப்பவன் வேளாண்மையையும், நிர்வாகம் விரும்புகிறவர்கள் மேலாண்மையையும் பாடங்களாக தேர்ந்தெடுத்தால் பரிமளிப்பார்கள்.

கவிதையை நேசிப் பவர்கள் ரசாயனத்தை படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வரும். விரும்பியதை படிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் வரும்.

அதிக ஊதியம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே நாம் பணியையும்,படிப்பையும் தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி மணல் கோட்டையாக மாறிவிடும்.

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது, படிக்க நல்ல புத்தகங்களை தேர்ந் தெடுப்பது, நல்ல பொழுதாக்கத்தை தேர்ந்தெடுப்பது என இனிய முடிவுகளை எடுப்பவர்கள் மட்டுமே கலங்கரை விளக்கத்தின் உச்சத்தில் உட்காருகிறார்கள். தத்தளிக்கும் பலரை கரை சேர்க்கிறார்கள்.

முடிவெடுக்கப் பழகுவோம் முன்னேற்றம் அடைந்திடுவோம்!