"நமக்குப் பிடித்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்!"
-'நோபல்' ஹீரோ ராமகிருஷ்ணன

கார்த்திகாகுமாரி

இந்த வருடத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் 2009-ம் வருடத்தில் பல்வேறு துறைகளில் நிறைய சர்வதேச விருதுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்களோ என்னவோ... பல ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசுப் பட்டியலில் ஒரு தமிழரின் பெயர். விருது வாங்கி இருப்பவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இஸ்ரேலின் வெய்ஸ்மேன் நிறுவனத்தில் பணி புரியும் அடா யோனத் மற்றும் அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் தாமஸ் ஸ்டெய்ட்ஸ் ஆகிய இருவருடனும் வேதியியலுக்கான இந்த வருட நோபல் பரிசினைப் பகிர்ந்து கொள்கிறார் வெங்கட்ராமன். தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள எம்ஆர்சி பரிசோதனைக் கூடத்தில் பணிபுரிகிறார்.

இவர்கள் மூவருக்கும் உயிர்களின் அடிப்படைக் கூறான செல்லில் இருக்கும் ரிபோசோம் பற்றிய தனித்தனி ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய மரபணுக் குறியீடுகளை ப்ரோட்டீனாக மாற்றும் ப்ரோட்டீன் தொழிற்சாலை ரிபோசோம். ஒவ்வொரு உயிரினத்தையும் கட்டடமாக உருவகித்துக் கொண்டால் அந்தக் கட்டடத்தின் செங்கற்கள்தான் இவை.

இதை வைத்து புதிய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வில் இருக்கிறார் கள் இவர்கள் மூவரும். பொதுவாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகளுக்கு முதலில் உயிர் விடும் நுண்ணுயிர்கள் அடுத்தடுத்த தலைமுறையில் அதை எதிர்க்கும் திறன் கொண்டவையாகி இன்னும் வலிமையானவை ஆகிவிடும். ஆனால் இவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் தன்மை வேறுவிதமானவை. இவை மனிதர்களின் ரிபோசோமுக்கும், பாக்டீரியாக்களின் ரிபோசோமுக்குமான வித்யாசத்தை உணர்ந்து வைத்திருக்கும். பாக்டீரியாவின் ரிபோசோமைத் தாக்கி அழித்துவிடும். ஒரே ஒரு செல் உயிரி யான பாக்டீரியாவின் ஒற்றை ரிபோசோமையும் அழித்துவிட்டால் அப்புறம் அந்த பாக்டீரியாவே கிடையாதே... இந்தப் பாதையில்தான் இவர்களுடைய ஆராய்ச்சி பயணிக்கிறது.

"உயிரியல் சார்ந்த எந்தக் கேள்வியாக இருந்தாலும் அது வேதியியல் சார்ந்த பிரச்னையாகி விடுகிறது. காரணம் உயிர்கள் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் வேதியியல் விதிகளின்படி இயங்குபவை. அதனால்தான் உயிரியல் ஆய்வாளர்களான நாங்கள் வேதியியலில் பரிசு வாங்கி இருக்கிறோம்" என்று சொல்கிறார் வெங்கட்ராமன்.

கடலூரில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தவர். 1971-ல் பட்டப் படிப்பையும், 1976-ல் முனைவர் பட்டமும் பெற்றார். இரண்டுமே இயற்பியலில்தான். அடுத்த இரண்டு வருடங்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்தார்.

"இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு உயிரியல் படிக்க ஆரம்பித்த என்னை எல்லாருமே வினோதமாகப் பார்த்தனர். ஆனால் எனக்கோ மனதுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்றுதான் தோன்றியது. நான் முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வு எனக்கு அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. எனினும் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அதை முழுமையாக முடித்தேன்.அந்த சமயத்தில் 'சயின்டிஃபிக் அமெரிக்கன்' என்ற அறிவியல் இதழை வாங்கிப் படிப்பேன். அதில் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். இயற்பியலில் இருந்து உயிரியலுக்கு மாறிய எத்தனையோ பேரை எனக்குத் தெரியும் என்பதால் நானும் தைரியமாக உயிரியல் படிக்க ஆரம்பித்தேன். அது எவ்வளவு சரியான முடிவு என்பதையும் நமக்குப் பிடித்த விஷயத்தில் தயங்காமல் முழு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதையும் இந்த நோபல் பரிசு எனக்கு உணர்த்தியிருக்கிறது" என்கிறார் ராமகிருஷ்ணன்.

சரிதானே!

நோபல் பெற்ற ஒபாமா!

உலக மக்களுக்கு இடையிலான பிணைப்பையும், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்காக சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக அமைதிக்கான இந்த வருட நோபல் பரிசைப் பெறுகிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் முயற்சியையும் அங்கீகரித்துள்ளது நோபல் பரிசுக் கமிட்டி.

மிக முக்கியமான சர்வதேச பிரச்னைகளுக்குப் போரை நாடாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பல நாடுகள் முன் வந்துள்ளதற்கு ஒபாமாவின் முயற்சிகள்தான் காரணம். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை வலுப்படுத்தத் தேவையானதைச் செய்துள்ளார் ஒபாமா. மனிதர்களின் செயற்கைத் தேவைகளால் இயற்கையைச் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டுக்கு ஆளாக்கி, அதன் மூலம் உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் வானிலை மாற்றங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா முழுமூச்சில் இயங்கி வருகிறது. இதற்கும் ஒபாமாதான் காரணம். இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் ஒபாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.