கலக்கும் குகைப் பள்ளி!

என்.மல்லிகார்ஜுனா

ஆதிகாலத்தில் மனிதர்கள் குகையில் வசித்தார்கள் என்று பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். நிலவில் வசிக்க ஆராய்ச்சிகள் நடக்கும் இந்த நாகரிக காலத்திலும் குகையில் வசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்... அங்கே ஒரு பள்ளிக்கூடமே இருக்கிறதென்றால் ஆச்சர்யம்தானே.

சீனாவில் தென்மேற்கு மாநிலமான குயிஸோ (Guizhou)-வில் இருக்கும் ஒரு மலையில் இந்தக் குகை அமைந்திருக்கிறது. இதன் பெயர் 'ஸோங் டாங்க்'. இதற்கு நடு குகை என்று அர்த்தம். இயற்கையாகவே உருவாகிய இந்தக் குகையில் 20 மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன. சீன அரசாங்கம் இந்த மலைவாழ் மக்களுக்காக குகை இருக்கும் மலையின் அடிவாரத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுத்தது. "அந்த வீடுகள் வேண்டாம்... எங்களுக்கு இயற்கை தந்துள்ள இந்தக் குகையே போதும்" என்று சொல்லி, அந்த 20 குடும்பங்களும் குகையை விட்டு வர மறுத்துவிட்டார்கள்.

மேலும், "அந்த வீடுகளில் வசித்தால் மழைக் காலங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்துவிடும். குளிரும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தக் குகையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால்தான் இங்கேயே தொடர்ந்து பல வருடங்களாக வசித்து வருகிறோம்" என்கிறார் குகைவாசி ஒருவர். குகைக்குள் கூரையில்லாமல் ஓலைப் பாயில் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். தரைக்கும் இதையே உபயோகிக்கின்றனர்.

இவர்கள் டவுனுக்குப் போக வேண்டுமானால் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டும். குகையில் இருக்கும் பாறைகளைக் கடந்து, கரடுமுரடான பாதையில் நடந்து, அதற்குப் பிறகுதான் சாலையை அடைய வேண்டும். இதற்கே ஒரு மணி நேரம் ஆகுமாம். டவுனுக்குப் போய் ஒரு வாரத்துக்குத் தேவையான வீட்டுப் பொருட்களை வாங்கி வந்துவிடுகிறார்கள். சமீபத்தில், சுற்றியுள்ள மலைவாழ் கிராமங்களுடன் சேர்த்து இந்தக் குகைக்கும் மின்சாரத்தைத் தந்துள்ளது அரசாங்கம்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம்... மலைவாழ் மக்களுக்குப் படிப்பறிவை ஊட்டவேண்டும் என எண்ணிய சீன அரசாங்கம், இந்தக் குகையிலேயே ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கியது. 1984-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 186 மாணவர்கள் படிக்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.

இந்த விசாலமான குகையில் விளையாட்டு மைதானமும் அமைத்து, மாணவர்களுக்கு எல்லாவித விளையாட்டுகளையும் சொல்லித் தருகிறது இந்தப் பள்ளி. "அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து கூட மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த குகைப் பள்ளிக்கு வருகிறார்கள். சிலர் தினமும் 6 மணிநேரம் நடந்தே இந்தப் பள்ளிக்கு வந்து போகிறார்கள். இது அவர்களுக்கு படிப்பின் மீது உள்ள அக்கறையைக் காட்டுகிறது. இப்போது நகரங்களில் இருக்கும் மாணவர்களைப் போலவே இவர்களும் மாறி வருகிறார்கள்" என்று ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.

"தற்போது, நான்கு வீடுகளில் டி.வி.யும் சில வீடுகளில் DVD-யோடு சாட்டிலைட் டிஷ்ஷ¨ம் உள்ளன. வாஷிங் மிஷினும் சில வீடுகளில் இருக்கிறது. எங்கள் பிள்ளைகள் படிப்பிலும் சிறப்புடன் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்தப் பள்ளிதான். இந்தப் பள்ளி எங்கள் வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்துவிட்டது" என்கிறார்கள் இந்த குகைவாசிகள்.